உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

தேர். தோள் கள்வர், கணவர், கானவர் வேறுபடுதல

வேறு:

வேறு:

சுவ்டி இயல்

என்னும் சொற்கள்

"திண்டேர்ப் பொறையன் தொண்டி 'திண்டோட் பொறையன் தொண்டி" “உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம் பொன்புனை பகழி செப்பம் கொண்மார்”5 “உள்ளார் கொல்லோ தோழி கணவர்தம்' "உள்ளார் கொல்லோ தோழி கானவர்"

திண்தேர்ப் பொறையன் - திண்தோள் பொறையன் என்பன வற்றுள் பிறிதின்கிழமை-தற்கிழமைப் பொருள்கள் உரியவாயின. கள்வர்- கணவர் ஒருவரையே சுட்டின ஆயினும் பொருளமைப்பில் சிறிது விளக்கம் பெற்றன. கானவர். என்பது செலவால் பொருத்த முடையதாகிறது.

தொடர் வேறுபாடு : எழுத்தாலும் சொல்லாலும் வேறுபாடு தோன்றுதலல்லூாது சிலதொடர்களே மாறுபட்டு அமைய, பொருள் பொருந்தியும் பொருந்தாதும் காணப்பெறும் வேறுபாடு களுக்கும் சான்றுகள் காட்டலாம்.

குறுந்தொகையில் சில தொடர் வேறுபாடு "ஞாயிறு காயாது மரநிழற் பட்டு

வேறு :

66

தண்மழை தலையின் றாகாநந் நீத்துச் சுடர்வாய் நெடுவேற் காளையொடு மடமா வரிவை போகிய சுரனே'

"ஞாயிறு காணாத மாணிழற் படீஇ

தண்மழை தலையலாரைக் குகந்த தீறித்துச் சுடர்படு நெடுவேற் காளை யொடு

மடவர லரிவை போகிய கானே

ஞாயிறு என்ற சொல்லைத் தவிர பிறசொற்கள் மாறுபட்டு வரும் முதலடி பொருளால் ஓரளவு பொருந்துகிறது. இவ்வாறே முதற்சீரினைத் தவிர பிற வேறுபட்டு வந்த அடுத்த வந்த அடுத்த அடியில் பொருள் புலப்பாடு சிறிதும் இல்லை. ஈற்றடி பொருள் வேறுபடுகிறது. தொடர்கள் பலவும் சிதைந்தும் மாறுபட்டும் வரும் தொடர் வேறுபாடாகிறது.

57. குறுந்தொகை 128. 58. ஷை. 16. 59.

தந்து

குறுந்தொகை, 378.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/134&oldid=1571210" இலிருந்து மீள்விக்கப்பட்டது