உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

தன்மை - வேறுபடுந்தன்மை

119

பாடல் அடிகளிலும் உரைத் தொடர்களிலும் எழுந்தோ சொல்லோ புதியதாகத் தோன்றி மூல பாடத்தினின்றும் வேறு பட்டு விடுவதுண்டு. இதே போல இருக்கும் எழுத்தோ சொல்லோ கெட்டு வேறுபாடு தோன்றுதலும், திரிந்து வேறுபாடு தோன்று தலும் மூல பாடங்களினிடையே காணப்படுகின்றன. இவற்றைத் தோன்றல், கெடுதல், திரிதல் என்னுந் தன்மை வேறுபாடுகளாகக் கொண்டு சான்று தர முடிகிறது.

தோன்றல்- சொல் தோன்றல்

வேறு :

"கண்டன கண்க ளிருப்பப் பெரும்பணைத்தோள்” 'கண்ட கருங்கண் ணிருப்பப் பெரும்பணைத்தோள் "புலாஅன் மறுகிற் சிறுகுடிப் பாக்கத்து

வேறு : 'புலா அனாறு மறுகிற் சிறுகுடிப் பாக்கத்து

இப்பாடலடிகளுள் கருமை,நாறும் என்னும் சொற்கள் புதியன வாகத் தோன்றி மூல பாடங்களில் வேறுபாட்டினை உண்டாக்கி யுள்ளன.

எழுத்து - தோன்றல்

"மற்றுயான் என்னுளேன் மன்னோ”62

வேறு : "மற்றுயான் என்னுள்ளேன் மன்னோ"

இவற்றுள் ளகர ஓற்று தோன்றி வெண்சீர் வெண்டளையா இது புதிய எழுத்துத் தோன்றியதாலான வேறுபாடாகும்

யிற்று.

கெடுதல்

•ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்" வேறு : "ஓங்குவரை யடுக்கம் பாய்ந்துயிர் செகுக்கும்” அடுக்கத்து அத்துச் சாரியை கெட அடுக்கம் ஆயிற்று.

"யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின்' வேறு : "யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டபின்”

விட்டதன்பின் என்பதில், 'தன்' கெட்டு, விட்டபின் என்றாயிற்று இவை எழுத்தும் சொல்லும் கெட்டு நின்ற வேறுபாட்டு வகைக்குச் சான்றுகளாகின்றன.

60. பழமொழி. 61. அகநானூறு 270. 62. குறள், 1206. 63.தொல். செய்.23 சான்று. 64. முத்தொள்ளாயிரம், 104.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/135&oldid=1571211" இலிருந்து மீள்விக்கப்பட்டது