உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

திரிதல் - எழுத்துஞ் சொல்லும் திரிதல்

சுவடி இயல்

"அப்போது மலர்தூவி... என்மனத்தே வைத்தேனே " B 5 வேறு: அப்போடு மலர்தூவி என்மனத்தே வைத்தேனே

..

அப்போது- அப்போடு என ஓர் எழுத்துத் திரிந்த வேறுபாட்டில் அப்போது என்னும் சொல், நீரால் அபிடேகம் செய்து மலர்தூவி என்னும் பொருளில் அப்போடு எனத் திரிந்தது.

“திங்களஞ் செல்வன் யாண்டுளன் கொல்லென” 6 6 வேறு : "திங்களஞ் செல்வன் யாங்குளன் கொல்லென'

யாண்டு என்பது யாங்கு எனச் சொல்லால் திரிந்த இவ்வேறு பாடு பொருள் மாற்றம் பெறாதாயிற்று.

இலக்கண வேறுபாட்டில் திரிதல்

வேறு :

வேறு :

"வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும்”63 "வேளாளர் என்றவர்கள் வண்மையால் மிக்கிருக்கும்'

"மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்

"மரந்தொறும் பிணித்த களிற்றின ராயினும்"

களிற்றினிர்

வெண்டளைகளே பொருந்திவரும் தேவாரப் பாடலுள் வண்மையால் என்னும் சீர். தளை கெடாது நிற்க,வள்ளன்மையால் எனத் திரிந்து கனிச்சீராகித் தளைகெடச் செய்கிறது. என்னும் முன்னிலைப் பெயர், களிற்றினர் எனப் பொருளில் திரிந்தது. இத்திரிதல் வேறுபாடுகள் இலக்கண அமைப்பில் வேறுபட்டனவாகும்.

பொருள் வேறுபடத் திரிதல்

படர்க்கைப்

கேட்பது விரும்பி நாய்கன் கிளைக்கெலா முணர்த்தி

வேறு : “கேட்டலும் விரும்பி நாய்கன்..."

யார்க்கும்” 6 9

கேட்பது - கேட்டலும் என்ற வேறுபாட்டில்-கேட்கத் தகுவதாகிய அதனை விரும்பி, சுற்றத்திற்கு உணர்த்தினான் என்ற பொருளில் திரிந்தது.

65. தேவாரம், 4233. 66. சிலப்பதிகாரம் 4:3. 67. தேவாரம், 1919. 68. புறநானூறு, 109. 69. சீவக சிந்தாமணி, 2078.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/136&oldid=1571212" இலிருந்து மீள்விக்கப்பட்டது