உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

சுவடி இயல்

சூடாமணி நிகண்டு -சிறப்புப் பாயிரப் பாடல்கள் சுவடியில் பத்துப் பாடல்கள் உள்ளன வேறு சுவடியைக் கொண்டு பதிப் பித்த பதிப்பில் இச்சுவடியில் காணும் இரண்டு பாடல்கள் மட்டுமே அச்சாகியுள்ளன.

7 8

சிந்தாமணிப் பாடல் எண்ணிக்கை வேறுபாடு

"மெய்ந்நீர்த் திருமுத்து இருபத்தேழ் கோத்துமிழ்ந்து

திருவில் வீசும்

செந்நீர்த் திரள்வடம்போல் சிந்தா மணியோதி யுணர்ந்தார் கேட்டார்”

உரை : இருபத்தேழ் என்றார் ஒன்றைப் பத்தாற் பெருக்கி இருநூற்று எழுபதைப் பத்தாற் பெருக்கின இரண்டாயிரத்து எழு

நூற்றை இந்தச் சிந்தாமணிச் செய்தி திருத்தக்க தேவரால் செய்யப் பெற்ற பாடல் இரண்டாயிரத்து எழுநூ றே என்பதைப் புலப்படுத்துகிறது.

ஆனால் சுவடிகளிலும், பல்வேறு பதிப்புகளிலும் மூவாயிரத்து நூற்று நாற்பத்தைந்து பாடல்கள் வரை எண்ணிக்கையால் வேறு பட்டுக் காணப்படுகின்றன.

வேறுபாட்டுப் பொருத்தம்

சுவடிகளிலும் பதிப்புகளிலும் காணப்பெறும் வேறுபாடுகளைப் பெரும்பான்மைத் தலைப்புகளில் ஆறுவகைப்படுத்தியும், அவை அமையும் தன்மையால் உட்தலைப்புகளில் பதினேழு வகைப்படுத்தி யும் சான்றுகள் காட்டப் பெற்றன. இச்சான்றுகள் அனைத்தும் அந்தந்தத் தலைப்புக்களுககென ஆக்கப்பட்டவை அல்ல. சுவடிகளி லிருந்தும் சுவடிப் பதிப்பு நூல்களிலிருந்தும் தேர்ந்தெடுத்து வகைப் படுத்தப்பட்டவையாகும். எனவே ஒரு தலைப்பிற்குக் காட்டப்

பட்ட

சான்றுகள் அத்தலைப்பிற்கு மட்டுமே பொருந்தியவை அவற்றைப் பொருத்திக் காட்டுமாற்றால் பிற வேறு பாட்டுத் தலைப்புகளுக்கும் காட்டலாம். சான்றாக,

ஆகா.

அம்பொன்-அஞ்சொல்'5 என்ற வேறுபாட்டினைச்

சொல்

வேறுபாடு, பொருள் வேறுபாடு என்னும் இரு ரு தலைப்புகளிலும் பொருத்திக் காட்டலாம். இவ்வேறுபாட்டு வகைகளும்

73. சூடாமணி நிகண்டு, சுவடி, டி. 19. 74. சீவகசிந்தாமணி, 3143. நச்சர்உரை. 75. உரையாசிரியர் காலவேறுபாடு, பக். 4.

சான்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/138&oldid=1571214" இலிருந்து மீள்விக்கப்பட்டது