உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

123

களும், மூலபாட ஆய்வியல் நோக்கில், காரணமறிந்து ஆசிரியரின் உண்மைப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கும் சுவடிஇயல் பயிற்சிக்குரிய பலவகை அனுபவத்தைப் பெற வைப்பதற்குத் துணையாக

அமைவனவாகும்.

பாட வேறுபாடுகள் தோன்றுதற்குரிய காரணங்கள்

சுவடிகள் உருவான முறை : மனப்பாடத்திலிருந்து சொன்ன போது இடையிடையே மறதி ஏற்பட்டு, பல நூல்களை மனப் பாடம் செய்ததனால் உள்ளத்திலிருந்த சொற்களஞ்சியமும், நூலி லிருந்த கருத்தாழமும் ஓசை நயமும் யாப்பறிவும் துணை நிற்க வேறுபட்ட பாடங்கள் தோன்றியுள்ளன.

மனப்பாடத்திலுள்ளதை எழுதி வைக்க வேண்டுமென்ற நோக்கத்தாலும், மாணாக்கரை எழுதிக் கொள்ளச் செய்ய வேண்டும் என்ற கருத்தாலும் பிறரை எழுதச் சொல்லும்போது உச்சரிப்பில் ஏற்படும் குறைபாட்டாலும், சிவ ஒலிகளின் ஒப்புமை யாலும் உரிய சொற்களும் தொடர்களும் மாற்றி எழுதப் பெற்று விடுகின்றன.

ஒரு

சுவடிகள் எழுதப் பெற்ற முறையால் வேறுபாடுகள் : சுவடியைப் பார்த்துப் படியெடுக்கும் பணி இரண்டு அடிப்படையில் நடைபெற்றுள்ளது. ஒன்று தங்கள் உபயோகத்திற்காக எழுதுவது; மற்றொன்று பிறருக்காக எழுதுவது. எந்த நிலையில் எழுதப் பட்டாலும் தற்செயலாகவே சில விடுபடுதலும் சில மிகுதியாக எழுதப்படுதலும் ஏற்படுவதுண்டு. சுவடியில் உள்ள வரியைப் பார்த்துவிட்டு எழுதுவதும், மீண்டும் சுவடியைப் பார்ப்பதுமாகிய செயல்களால், ஒரே மாதிரியான முடிவுச் சொற்கள் அமைந்த, முதற் சொற்கள் அமைந்த வரிகளுள் ஒன்று விடுபடுவதோ, மீண்டும் எழுதப்படுவதோ நிகழக்கூடும்.

முன் பின் வரிகளில் இடையே ஒரே மாதிரியான சொற்கள் காணப்படுமாயினும் ஒரு வரியில் உள்ளதை எழுதிய பிறகு அடுத்த வரியில் அல்லது முன்வரியில் உள்ள அதே சொல்லைக் கண்டு அது வரை எழுதப்பட்டுவிட்டதாகக் கருதி அதைத் தொடர்ந்து எழுது வதும் இயல்பாக நிகழக்கூடிய செயலாகும். இதனால் விடுகையும் மிகையும் ஏற்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/139&oldid=1571215" இலிருந்து மீள்விக்கப்பட்டது