உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

"மூதாக்கள் செய்தவமோ முடிவேந்து செய்தவமோ

>,82

125

மாதாக்கள் செய்தவமோ மாதடியாள் செய்தவமோ இவ்வடிகளில் இடையிலும் ஈற்றிலுமாக அமைந்துள்ள போற்றி, காண்க, தவமோ என்னும் சொற்கள் சுவடி எழுதுவோருக்கு மயக்கத்தை அளித்து மீண்டும் மீண்டும் எழுதும் வாய்ப்பையோ சில தொடர்களை விடும் வாய்ப்பையோ அளித்துவிடக்கூடியன வாகும். முதலும் ஈறும் இடையுமாக எடுத்துக் காட்டப் பெற்ற இச்சொற்கள், சுவடிகளில் இங்குக் காட்டப் பெற்றது போல அடிவரையறையுடன் காணப் பெறாமல் தொடர்ச்சியாக எழுதப் பெற்ற நிலையில் மாறி மாறி அமையும். அதனால் பல குழப்பங் கள் ஏற்பட்டு இவ்வகை வேறுபாடுகள் நிகழும் வாய்ப்பு மிகுதி யாகிறது.

இடைவிடுகை: கையெழுத்துத் தெளிவின்மை, ஏடு பூச்சி யரித்துப் பழுதடைதல் ஆகிய காரணங்களால் எழுத்தோ சொல்லோ தொடரோ விளங்காத நிலை ஏற்படும்போது ஏட்டில் போதுமான

இடம் விட்டு மேலே தொடர்ந்து எழுதியிருப்பர். மறதியால்

அவ்விடம் நிரப்பப் பெறாமலே இருந்து விடுமேயானால், அச்சுவடி யைப் பார்த்து வேறு படி எடுப்போர் விடுபட்டுள்ள அவ்விடத்தைப் பற்றிக் கவலைப்படாமல் உள்ளதைத் தொடர்ச்சியாக எழுதி விடுவர். இதனால் அவ்விடுகை சுவடியில் நிலைத்து விடுகிறது.

ஏடுபிறழ்ச்சி : சுவடியில் ஏடுகள் மாறியிருந்ததைக் கூடக் கவனியாமல் எழுதப் பெற்றுள்ள செயலையும் படியெடுப்போரிடம் காணமுடிகிறது. சான்றாகத் திருவேங்கடநாதன் வண்டுவிடுதூது என்னும் நூலில் பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கும் தனிப் பாடல்கள் சுவடியில் அமைந்திருக்கும் முறையைக் காட்டலாம். இத்தனிப்பாடல் பகுதி முப்பது பாடல்களைக் கொண்டது. அவற்றுள் கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் பத்து. அவை பத்தும் ஒழுங்காகவே உள்ளன. ஏடு எழுதியவர் தாம் பார்த்து எழுதிய மூலச் சுவடி ஏடு பிறழ்ந்திருந்ததை அறியாமல் எழுதியிருக் கிறார். அதாவது எட்டாம் பாடலின் நான்காம் அடியே தொடக்க அடியாக உள்ளது. பிறகு ஒன்பது, பத்தாம் பாடல்கள் அமை கின்றன. அடுத்து ஐந்து வெண்பாக்கள் அமைகின்றன. அவற்றின் பின் அக்கட்டளைக் கலிப்பாக்கள் ஏழும் எட்டாம் பாடலின் முதல்

82. சுசீல வண்னல் அம்மானை. வரி. 356-57.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/141&oldid=1571217" இலிருந்து மீள்விக்கப்பட்டது