உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மூன்று அடிகளும் அமைந்து நிறைவு பெறுகின்றன.

சுவடி இயல் முதல் ஏழு

பாடல்கள் கிடைக்கவில்லை என்ற குறிப்போடு நூல் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.

8 3

சேர்க்கைகள் : ஆசிரியர் ஒரு நூலைக் கற்பிக்கும்போது தம் திறமைக்கு ஏற்பச் சிலவற்றை இயற்றிக் கூறுவதுண்டு. கற்போர் அவற்றை ஏட்டின் ஓரப்பகுதிகளில் குறித்து வைப்பர். அவை படியெடுப்போரால் ஏதேனும் ஓரிடத்தில் சேர்த்து எழுதப் பெற்று

விடும்.

நூலில்

படியெடுப்போர் சிறந்த அறிஞர்களாக இருந்தால் இடத்திற்கேற்பச் சில சேர்க்கைகள் சேர்ந்துவிடுவதும் உண்டு. இடம், கருத்து ஆகியவற்றிற்கேற்பப் பொருத்தமாகச் சேர்க்கப் படும் அச்சேர்க்கைகள் அவர்களே இயற்றியனவாகவோ முன் வேறு நூல்களில் தாம் கற்றனவாகவோ இருக்கும். ஆனால் அவற்றைப் பற்றிய குறிப்புகள் சுவடியில் சேர்க்கப் பெறுவதில்லை. பிற்காலப் படிகளில் அச்சேர்க்கைகள்

அமைந்துவிடும்.

தன்று.

மூலநூலின் பாடல்கள் போலவே

சேர்க்கைகளின் நோக்கம் : இடையே ஏற்படும் இச்சேர்க்கை மூலநூலாசிரியருக்கு மாசு கற்பிக்க வேண்டுமென்ற நோக்கமுடைய மூல நூலின் இன்பத்தில் முழுகித் தாமும் அதுபோலவே பாடல் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தால் நிகழ்வதாகும்; நூலின் சுருக்கமான செய்திகளை விரிவாகச் சொன்னால் மேலும் சுவையாக இருக்கும் என்னும் நோக்கத்தால் நிகழ்வதாகும்; இடையிடையே குறிப்பால் உணருமாறு விடப்பெற்ற அல்லது குறிப்பால்

உணர்த்தப்பெற்ற இடங்களைக் கதைகளின் மூலமாக, பிற சான்று களின் மூலமாக விளக்கினால் நூல் சிறப்படையும் என்ற கருத்தால் நிகழ்வதாகும். இதே போலப் பலவகைத் திருத்தங்களும் நடை பெற்றுள்ளன.

எழுதுவோரால் ஏற்படும் வேறுபாடுகள்

“பாமரரும் பிரதி செய்தார்கள்; பண்டிதரும் பிரதி செய்தார் கள். பாமரர்கள் கூலிக்காகவே பிரதி செய்தல் பெரும்பான்மை வ வழக்கு. புலமையில்லாமையால்... சொற்பிழைகள், எழுத்துப்பிழைகள் நிரம்ப ஏற்பட்டன

யான

83.

84

திருவேங்கடநாதன் வண்டுவிடுதூது, பின்னிணைப்பு. 2. 84. திருவாசகக் குறிப்புக்கள், பக். 164.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/142&oldid=1571218" இலிருந்து மீள்விக்கப்பட்டது