உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

127

இவ்வாறு கூலிக்காகச் சுவடி எழுதுவோரிடை ரண்டு வகையான குறைபாடுகள் எழுகினறன. ஒன்று எழுதுவோர் நலம்; மற்றொன்று சுவடியின் தன்மை. இவற்றுள் எழுதுவோரின் உடல் நலக்குறைவு, வயது முதிர்வு, பார்வை சரியின்மை, கவனச்சிதைவு, பணத்தேவை, டம் முதலிய வசதியின்மை ஆகியவற்றால் ஆகியவற்றால் பிழைகளும் விடுகை களும் மிகைகளும் பலவாறாகத் தோன்றிவிடுகின்றன. அவர்களின் கல்விக் குறைபாட்டிற்கு ஏற்ப, சுவடிகளின் கையெழுத்துப் புரியாத தன்மையும், பழுதடைந்து எழுத்துகள் பழுதடைந்து எழுத்துகள் இராமபாணம் முதலிய வற்றால் உழப்பட்டுள்ள தன்மையும் சேரும்பொழுது மேலும் பல பிழைகள் ஏற்பட்டு விடுகின்றன. பேச்சு நடையும் பிறமொழிச் சொற்கள் கலந்த நடையும் காணும்பொழுது சொற்களின் பொருள் புரியாமல் மாற்றி எழுதிவிடும் நிலையும் ஏற்படுகிறது.

காரணமா

எழுதச் செய்வோரால் ஏற்படும் வேறுபாடுகள் : வேறுபாடுகள் தோன்றுவதற்குச் சுவடியை எழுதச் செய்வோரும் கின்றனர். சுவடி நூலகம் போன்ற நிறுவனங்களில் தமக்கு வேண்டியவர் என்ற தகுதியால் மட்டுமே சுவடி எழுதுவோர் தேர்ந் தெடுக்கப்பெறுகின்றனர். அவர்கள் செய்யும் பிழைகளை மேற் பார்வையாளர் சுட்டிக் காட்டியபோதும் கவனிக்கப் படுவதில்லை. தங்கள் தேவைக்காகப் படியெடுப்போரை விரைவுபடுத்துவதும் ஒரு காரணமாகிறது. விரைவு காரணமாக மிகவும் பிழைபட எழுதுவ தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பணியும் ஒப்புக்காகவே நடைபெறு கிறது. ஒருவர் படிக்க ஒருவர் எழுதுவது என்ற முறையும் பயன் படுத்தப்படுகிறது. இம்முறை கல்வியிற் குறைபாடுடையவர்களுக்கு இரண்டு வகையில் பிழைபுரியத் தூண்டிவிடுகிறது. ஒன்று படிப் போரின் ஒலிவேறுபாடுகள்; மற்றொன்று ஒலிக்கு ஏற்ப எந்த எழுத் தையும் எழுதுவது. பிழை, வேறுபாடு ஆகியவை ஏற்படுவதற் குரிய இக்காரணங்கள் எழுதச் செய்வோரால் ஏற்படுபவையாகும். இக்காரணங்களால் பலவற்றையும் தொகுத்து ஐந்துவகையுள் அடக்கி அவற்றிற்குரிய சான்றுகளைத் தந்து விளக்குகிறது இப் பகுதி.

வகைப்பாடு

1. சுவடிகள் மனப்பாட நிலையிலிருந்து உருவாகியுள்ளன. அவ்வாறு சொல்லும்போதும், சொல்ல வேறொருவர்

2.

எழுதும்போதும் வேறுபாடுகள் தோன்றுகின்றன.

சுவடியைப் பார்த்து எழுதும்போது தற்செயலாகவே சில விடுகைகளும் மிகைகளும் தோன்றிவிடக்கூடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/143&oldid=1571219" இலிருந்து மீள்விக்கப்பட்டது