உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

அ.

3.

4.

5.

சுவடி இயல்

நூலின் இடையிடையே சேர்க்கைகளையும் திருத்தங்களை யும் தெரிந்தே செய்துள்ள நிலையும் காணப்படுகிறது. எழுத்து முறையாலும்

சுவடியில் எழுதப்பெறும்

கை

யெழுத்துத் தெளிவின்மையாலும் குழப்பங்கள் ஏற்பட்டு வேறுவிதமாக எழுதிவிட்டதாலும் வேறுபாடுகள்

தோன்றியுள்ளன.

பேச்சுமொழி, வேற்றுமொழிச் சொல் கலப்பு ஆகிய வற்றால் ஏற்பட்ட மொழி நடையினால் தோன்றிய வேறுபாடுகளும் உண்டு.

மனப்பாடம்

பாடம் போற்றல் : எந்த நூலையும் மனப்பாடம் செய்து கற்றலே பழங்காலக் கல்விமுறையாக விளங்கியுள்ளது. இறைய னார் களவியல், ஒன்பது தலைமுறையாகப் பாடம் சொல்லப் பெற்று வந்த முறையினை எடுத்துக் காட்டுகிறது. 85 மாணாக்கர் பயிலும் முறைகளில் 'பாடம் போற்றல்' என்பது ஒன்று என்பதை இலக்கணங்கள் வற்புறுத்துகின்றன.* பாடம் போற்றல் என்பது மூலபாடத்தை மனப்பாடம் செய்தல் என்பதேயாகும். உரை யாசிரியர்கள் காட்டும் சான்றுகள் பலவும் அவர்கள் மனப்பாடத்தி லிருந்து தோன்றியவையாகும்.

பண்டைக்காலத்தில் முறையாகப் பாடஞ்சொல்லிவந்த ஆசிரி

யர்கள், நூலாசிரியர்களுடைய வரலாற்றை மாணாக்கருக்கு முதலில் சொல்லிவிட்டு அதன்பிறகே நூலை உரைப்பார்கள் அதனால்தான் புலவர்களுடைய வரலாற்றை எழுதி வைக்கும் வழக்கம் இல்லாமற் போயிற்று. அவ்வரலாறுகள் வழிவழியே வழங்கிவந்தன. முறையாகப் பாடஞ் சொல்லுதலும் கேட்டலும் தவறிய பிற்காலத்து, ஆசிரியர் வரலாறுகள் பலபடியாக வழங்கத் தலைப்பட்டன.

87

மனப்பாடத்தால் விட்டதை அறிதல் : விருத்தாசல ரெட்டியார் என்பவரின் மகன் தன் தந்தையிடம் கம்பராமாயணத்தைப் பாடங் கேட்டு வந்தார். ஒருநாள் அவர் திருசிரபுரம் கோவிந்தபிள்ளை பதிப்பித்த அச்சு நூலை வைத்துக் கும்பகருணப்படலத்தைப்

85. இறையனார் அகப்பொருள்-1, உரை.

86. தொல், பாயிரம்-இளம். உரை; நன்னூல். 41.

87. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், முகவுரை,

பக். 11.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/144&oldid=1571220" இலிருந்து மீள்விக்கப்பட்டது