உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

129

படித்துக் கொண்டிருந்தார். அவர்களும், அவ்வூர் பண்ணையார் ஒருவரும் உடனிருந்தனர். படித்துவரும்போது அப்பெரியவர் இடைமறித்துச் சில ஏடுகளைத் தள்ளி விட்டீர்களே என்றார். இல்லையே! தொடர்ச்சியாகத்தான் படித்துவருகிறேன் என்றார் மாணாக்கர். சில பாடல்கள் விடு கின்றன என்று கூறித் தன்னிடமிருந்த சுவடியை எடுத்துவந்து காட்டினார். அச்சு நூலில்லாத சில பாடல்கள் சுவடியில்

அப்போது உ. வே. சாமிநாதையர்

இருந்தன.

ஒப்பிக்கும் வழக்கம்

சிந்தாமணி உரையில் நச்சினார்க்கினியர்

ன்ன

அங்கங்கே அந்நூற் செய்யுட்பகுதிகளை மேற்கோளாகக் காட்டி யிருக்கிறார். உ.வே சா. அவர்கள் அச்செய்யுட் பகுதிகளைச் சொன்னவுடன் சந்திரநாத செட்டியார் என்பவர் அவை, இன்ன இடத்தில் உள்ளன என்று சொல்லி முழுப்பாட்டையும் சொல்லுவார்.89

"படித்தவர் யாரேனும் வந்தால் கஸ்தூரி ஐயங்கார் எனக்குப் பாடம் சொல்லிய நன்னூல் சூத்திரங்களையும் உரையையும் என்னைச் சொல்லும்படி செய்வார். அவற்றை நான் ஒப்பிப்பேன்’” 9 0

மனப்பாடத்திலிருந்து தொகுத்தல் : பெருந்தொகைப் பதிப்பில்

உள்ள பாடல்கள் பல புத்தகசாலைகளிலிருந்தும், தனியார் பலரிட மிருந்தும் கிடைத்த ஏட்டுச் சுவடிகளிலிருந்தும் திரட்டப்பெற்றவை. மேலும் பரம்பரைப் புலவர்கள் மூலமாகவும், தமிழ் மக்கள் மூல மாகவும் வாய்மொழியாகக் கிடைத்த தனிக்கவிகளும் பல

தொகுக்கப்பட்டுள்ளன.

91

பண்டைத் தமிழ்ப் புலவர்கள் அக்காலத்திலுள்ள எல்லா நூல் களையும் நன்கு மனப்பாடம் செய்திருந்தார்கள்... கற்றலுக்குப் பொருள் நிற்றல் என்று திருவள்ளுவர் கூறுகின்றார். கற்றல் என்றால் என்றும் மனத்திலே நிறுத்துதல் என்றுதான் பொருள். பண்டிதனுக்குத் தன் ஞாபகம்தான் உதவியதேயன்றி, புரட்டு வதற்குச் சுவடிகள் பயன்பட்டதில்லை. 92

88. என் சரித்திரம், பக். 209-210. 89. ஷெ. பக். 740-741.

90.

ஷை.

பக். 151.

91. பெருந்தொகை, முகவுரை, பக். 3.

92. திருவாசகக் குறிப்புக்கள், பக். 163-164.

சுவ. 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/145&oldid=1571222" இலிருந்து மீள்விக்கப்பட்டது