உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

சுவடி இயல் "பண்டு வாய்மொழிக் கல்வியே பரவலாக இருந்து வந்தது. ஏட்டிலே எழுதிக்கற்பது அருகிய வழக்கே. ‘உரை' என்கிற சொல் இவ்வாய்மொழிவழிக் கல்வியை நமக்கு உணர்த்து கிறது"

இச் செய்திகள் எந்த நூலையும் மனப்பாடம் செய்து கற்ற பழங் கால முறையைப் புலப்படுத்துகின்றன.

மனப்பாடத்திலிருந்து

உருவான சுவடிகளில

வேறுபாடுகள் : நூல்களை மனப்பாடமாக வைத்திருந்தவர்கள் அந்நூல்களைப் பிறருக்குப் பாடம் நடத்தும்போது சுவடிகளின் உதவியின்றியே நடத்தினார்கள். வாய்மொழியாகவே சொல்லி மாணாக்கரை எழுதிக்கொள்ளவும் செய்தார்கள். அவ்வாறு சொல்லும்போது பல வேறுபாடுகள் தோன்றிவிட்டன. மிகப்பல பாடல்களை மனப் பாடம் செய்திருந்த அவர்கள் பாடல்களைச் சொல்லும்போது சில சொற்களை, தொடர்களை மறந்திருக்கிறார்கள். ஆனால் அந்த நூலின் ஆழ்ந்த பொருளை உணர்ந்திருந்த காரணத்தாலும், பல நூல்களை மனப்பாடம் செய்திருந்த காரணத்தாலும் அத்தொடர் கள் அவர்களுக்கு மறதியாகத் தோன்றவில்லை. ஆற்றொழுக்காக வேறு தொடர்களைக்கூறி அவ்விடத்தை நிரப்பியிருக்கிறார்கள். அவர்களின் கல்வித் திறத்தால் கருத்து அமைதி, சீரின் அளவு, எதுகை மோனைப் பொருத்தம், ஓசை நயம் ஆகியவற்றிற்கு ஏற்ப அத்தொடர்கள் அவர்கள் வாயினின்றும் தோன்றியிருக்கின்றன. இப்பாடவேறுபாடுகள் மனப்பாடப் பழக்கத்தால் தோன்றியவை

யாகின்றன.

இவ்வாறு மனப்பாடப் பழக்கத்தால் ஏற்பட்ட வேறுபாடுகளை, 1. ஆசிரியர் சொல்லுவதில் (அல்லது) அவரே எழுதுவதில் ஏற்படும் வேறுபாடு

2. ஆசிரியர் சொல்லிப் பிறரை எழுதச் செய்வதில் ஏற்படும் வேறுபாடு என இருவகையாகப் பிரிக்கலாம். அவ்வாறு சொல்லும் போது, 1. சொல் வேறுபடுதல் 2. சொல் இடம் மாறுதல் 3. சொல்திரிதல் 4.தொடர்; அடி வேறுபட்டு அமைதல் ஆகிய நிலைகளில் வேடுபாடுகள் தோன்றியுள்ளன.

93. சொல்புதிது சுவை புதிது - பக்.1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/146&oldid=1571223" இலிருந்து மீள்விக்கப்பட்டது