உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

சொல் வேறுபாடு

131

நோக்கத்

"தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கண் முழவி னேங்கக் குவகளைகண் விழித்து தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ

வேறு :

"தண்டலை மயில்க ளாலத் தாமரை விளக்க மேந்தக் கொண்டலை முழுவி னோங்கக் குவளைகள் விழித்து நோக்கத் தெண்டிரை யெழினி காட்டத் தேமபொழி மதுர யாழின் வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருந்த மன்னோ”

ஆல, ஏந்த, கொண்டலை, ஓங்க, குவளைகள், தேம்பொழி, மதுர யாழின் வீற்றிருந்த, மன்னோ என்பனவாகிய சொற்கள் அனைத் தும் மனப்பாட நிலையிலிருந்து இடத்திற்கும் ஓசை நயத்திற்கும் ஏற்ப, வாய்மொழியாகச் சொல்லப்பட்டு, வடிவம் பெற்றவை யாகும். இவற்றில் வடிவவேறுபாடாகவும் சில சொற்கள் அமை கின்றன.

சொல் இடமாற்றம்

"புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினுந் தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன்”96 வேறு: வாளிற் கொள்ளலிர் தாளிற் றாரலன்'

சொற்கள் இடமாற்றம் பெற்றுவரும் இவ்வேறுபாட்டில் பொருளும் வேறுபடுகிறது. உங்கள் முயற்சியினால் கொள்ளமுடியாது; வாள் வலிமைக்கு அஞ்சியும் தரமாட்டான் என்னும் முதற்பாடத்தின் பொருள், உங்கள் வாள் வலிமையால் கொள்ளமுடியாது; முயற்சி யினாலும் அவன் தரமாட்டான் பொருள்மாற்றம் பெற்றுவிடுகிறது. லிருந்து கூறியதால் ஏற்பட்டதாகலாம்.

சொல் திரிதல்

வழிவழியாகப்

என்று

பாடவேறுபாட்டால் இவ்வேறுபாடு மனப்பாடத்தி

பாடப்பட்டுவரும் இறைப்பாடல்களாகிய

பக்திப் பாடல்கள் பலவற்றிலும் சொற்கள் திரிந்து வந்த வேறுபாடு கள் வாய்மொழியாக வழங்கப்பட்டு வந்து இறுதியில் எழுத்து வடிவமும் பெற்றுள்ளன.

94. பாலகாண்டம் 2-4.

95. புறநானூறு, 109.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/147&oldid=1571224" இலிருந்து மீள்விக்கப்பட்டது