உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

சுவடி இயல்

"செல்வச் சிறுமீர்காள் - என்பது - செல்வச் சிறுமியர்காள் என்றாயிற்று.

-

‘பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்"- என்பது

“பாரோர் புகழப் பணிந்தேலோ ரெம்பாவாய்"

என்று வடிவம் பெற்றது.

இவை வாய்மொழியாகத் திரிந்து வழங்கி வந்து எழுத்து வடிவம் பெற்றுவிட்ட வேறுபாடுகளாகும். பாடுங்கால் ஓசை நயத்தோடு பாடப்பெற்று வழக்காற்றில் நிலைத்துவிட்ட இவ்வேறுபாடுகள் பொருளால் மாற்றம் பெறுகின்றன.

தொடர், அடி மாற்றம்

9

'செவியறி வாயுறை புறநிலை யென்றிவை வேறு: "புறநிலை வாயுறை செவியறி வென்றிவை"

இவ்வடிகளில் சொற்றொடர்கள் மாறியமைந்துள்ளன.

இவை

மனப்பாட நிலையினின்று தோன்றியவை. உரையாசிரியர்களும் இவ்வாறு மாறிமாறியே பொருள் கொண்டுள்ளதால் இவ்வேறுபாடு உரையாசிரியர்களுக்கு முன்பே தோன்றியதாகக் கொள்ளலாம்.

அடிசிற் கினியாளை யன்புடை யாளைப் படுசொற் பழிநாணு வாளை-யடிவருடிப் பின்றூங்கி முன்னுணரும் பேதையை யான் பிரிந்தா லென்றூங்கு மென்க ணெனக்கு

98

வேறு : "அடிசிற் கினியாளே யன்புடை யாளே படிசொற் கடவாத பாவா - யடிவருடிப்

பின்றூங்கி முன்னெழூஉம் பேதையே போதியே வென்றூங்கு மென்க ணினி."

என்பதில் ஒலி ஒப்புமையால் ஐகாரங்கள் நீட்டி இசைக்கப்பட்ட போது கேட்பவருக்கு ஏகார ஒலியாகப்பட அவ்வாறே பயிலப் பெற்று எழுத்து வடிவமும் தரப்பட்டுவிட்டன. படுசொல் என்பதும் அவ்வாறே படிசொல் ஆயிற்று. பழிநாணுவாளை என்னும் தொடர் அடியோடு மறக்கப்பட்டு வெண்பாவின் சீருக்கேற்ப, கடவாத பாவாய் என்ற வேற்றுவடிவம் பெற்றுவிட்டது. அதே போல முன்னுணரும் பேதை என்பதும் செப்பலோசை வழுவா 96. திருப்பாவை-1.

97. தொல்.செய்யு -160, பேராசிரியர், நச்சர். 98. தாமோதரம், பக்.126.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/148&oldid=1571225" இலிருந்து மீள்விக்கப்பட்டது