உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

வண்ணம் வெடுத்தது.

133

முன்னெழூஉம் பேதையென அளபெடையோடு வடி ஏகார ஈற்று விளியாக அமைந்த தொடர்களுக்கேற்ப இறுதியடியும் வடிவம் மாறியது. இவ்வேறுபாடுகள் பலவும் மனப் பாடம் செய்த நிலையிலும், மனப்பாடமாகக் கூறப் பிறர் கேட்ட நிலையிலும், கற்றவரின் புலமை நிலையிலும் தோன்றியவை யாகின்றன.

சொல்லி

L

எழுதுவதில் வேறுபாடு : மனப்பாடமாக உள்ள நூலையோ புதியதாகத் தாம் இயற்றிய நூலையோ ஆசிரியர் பாடம் நடத்தும் முறையில் அல்லது எழுதி வைக்கவேண்டும் என்ற நிலையில் தாம் சொல்ல, வேறு ஒருவரை - மாணாக்கரை - எழுதச் செய்து நூல்வடிவாக்குவது வழக்காற்றில் இருந்துள்ளது. அந்த நூல் ஆசிரியருக்காக அல்லது மாணாக்கர் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பெறும்.

6

இந்த நூலை ஆரம்பித்து ஒரு வருஷமாகிறது... இதை முன்பு நான் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதினார். அவர் திருத்த மாக எழுதக் கூடியவர் அல்லர். நான் ஏதாவது சொன்னால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் சில இடங்களில் வேறாக எழுதியிருக்கிறார். இப்படி இவர் செய்திருப்பா ரென்று சந்தேகப்பட்டுத்தான் மறுபடியும் படிக்கச் சொன் னேன், சொல்வதைச் சரியாக எழுதுவோர் கிடைப்பது அருமையாக இருக்கிறது.'

தாம் எழுதிய திருவம்பர் புராணத்தைத் ய திருத்திய மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் கூறிய இக்கூற்று ஆசிரியர் சொல்ல, வேறு ஒருவர் எழுதி சுவடி உருவாகின்ற நிலைக்குச் சான்றாகிறது. மீண்டும் ஆசிரியர் திருத்தம் செய்தபோது பிழைகளைக் காண நேர்ந்தது. இவ்வாறு சொல்லும் போது மாணவர் தங்களுக்கென எழுதிய சுவடிகள் அனைத்துமே திருத்தம் பெற இயலுவதில்லை. அவற்றில் பல வேறுபாடுகள் தோன்றி நிலைத்து விடுகின்றன சிலவற்றிற்குச் சான்றுகள் தரலாம்.

ஒலிமுறையால் நிகழ்ந்த வேறுபாடு உயிர் ஒலி ஒப்புமை

பலகுடை நீழலுந் தங்குடைக் கீழ்க்காண்பர்” 100

99. என் சரித்திரம்-பக். 386-87.

100. குறள் -1034, பரிமேலழகரும் காளிங்கரும் - கொண்ட

பாடங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/149&oldid=1571226" இலிருந்து மீள்விக்கப்பட்டது