பாடவேறுபாடு
139
செய்யுட்களை இயற்றி, அவற்றை அந்நூலின் இடையிடையே கோத்துச் சுமார் அறுநூறு செய்யுட்களைக் கொண்ட நூலாக, யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சங்கத்தார் வாயிலாக, 1842 இல் வெளி யிட்டுள்ளனர்.124
கதை
சொல்லுவதன்
மூலம்
டைச்செருகல்: சுப்பையர் சரித்திரக் கீர்த்தனங்களை
என்பவர் இயற்றிய மயில்ராவணன் உத்தமதானபுரம் லிங்கப்பையரின் குமாரர்கள் பாடிப்பொருள் சொல்லி வந்தனர். இடையிடையே செய்திகளைக் சொல்லிப் பின் கீர்த்தனங்களைப் பாடினால் மேலும் சுவைக்கும் என்று அவர்கள் கருதினார்கள். தங்கள் விருப்பத்தை மீனாட்சிசுந்தரம்பிள்ளை யவர்களிடம் கூறினார்கள். பிள்ளையவர்கள் அச்சரித்திரத்தை முழுமையாகக் கேட்டு நூறு செய்யுட்களாகப் பாடித் தந்தார்கள். லிங்கப்பையரின் குமாரர்கள் கீர்த்தனங்களோடு இடையிடையே அச்செய்யுட்களையும் சொல்லிக் கதை நிகழ்த்தி வந்தார்கள்.125
5
இச்செய்தி இடைச் செருகல் ஏற்படும் சூழலைப் புலப்படுத்து
கிறது. திருத்தம் சான்றோர் கூற்று : திவாகர நிகண்டின் சூத்திரங் களை அகராதி வரிசையில் அமைத்துப் பதிப்பித்துள்ளனர்.
இம்முறை பதிப்பித்தோர் தாமாகவே வகுத்துக் கொண்ட தென எண்ணுதற்கிடமில்லை. ஏனெனின் இன்றைக்கு 229 வருடங்கட்கு முன்னர் (கொல்லம்-877ல்) எழுதப் பெற்ற ஏட்டுப் பிரதியில் இம்முறையே காணப் படுகிறது......இம்முறைதானும் பிரதிகடோறும் சிற்சில
126
வேறுபாடுகளுடன் உள்ளது”1 2 6
தனிச்செய்யுட் சிந்தாமணியின் பாடல்கள் பெரும்பான்மையும் கர்ணபரம்பரைபற்றி வந்தவையாதலின் அவை பல்லோர் வாய்பட்டு வெளிவருங்கால் உண்மையுருமாறியும், வெவ்வேறான கதைக்கூறுகளை யுடையவையாகவும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.180
இவ்வுண்மைகள் சுவடிகளில் திருத்தங்கள் பல தெரிந்தே செய்யப் பெற்றுள்ளன என்பதைப்புலப்படுத்துகின்றன. இவ்வா றான சேர்க்கை, திருத்தம் ஆகிய இரு நிலைகளுக்கும் பாடலடிகள் சிலவற்றைச் சான்று காட்டலாம்.
124.
125.
126.
அரும்பொருள் விளக்கநிண்டு, முன்னுரை - பக். 7. என் சரித்திரம், பக். 31-32.
அரும்பொருள் விளக்க நிகண்டு, முன்னுரை. பக்-2,
127. தனிச் செய்யுட் சிந்தாமணி, முகவுரை.