உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

சுவடி இயல்

சேர்க்கை -சொற்கள் சேர்த்தல் : "வெண்பாட்டீற்றடி முச்சீர்த்

தாகும்

23

என்னும் நூற்பாவுக்கு உரை கூறிய பேராசிரியர்,

அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு சுட்டாலும் வெண்மை தரும்"

என முச்சீரடி இடையும் வந்ததால் வெண்பாவினுள் எனின்‘ முச்சீர்த்து என்னாது, ஆகும் என்று ஆக்கங்கொடுத்துக் கூறினமை யான் .. இடையுஞ் சிறுபான்மை வருமெனக் கொள்க' என்று விளக்கங்கொடுத்தார். அவர் காட்டிய மூதுரைப்பாடல் (4) வெண்பாவாதலின் "இடையே முச்சீரடி கண்டு மயங்கிய பிற்காலத் தார், கெட்டாலும் என்பதைத் தனிச்சீராக்கி, ‘தான்மிக்க வெண்மைதரும்' என இருசொற்கள் மிகையாகப் பெய்து வெண்பா வைச் சீர்ப்படுத்திவிட்டனர்."128

திருத்தம் : சுவடியில் உள்ளவற்றைப் பிரித்து எழுதி எளிமைப் படுத்துவதாகக் கருதியும், சிறந்த சொற்களாக அமைக்கவேண்டும் என்ற நோக்கத்திலும், எளிய சொற்களாக மாற்ற நினைத்தும் பலவகையான திருத்தங்கள் சுவடிகளில் செய்யப்பட்டுள்ளன.

"ஆசிரியர் வழிக் கேட்டுக் கற்றதை எழுதி வைக்கப் புகுந்த காலத்தே சில புதுக்கலும் திருத்தலும் விடுதலும் நேர்ந்திருக்கக் கூடும். இதனாலேயே மூலபாடங்களிலும் உரைகளிலும் சிற்சில வேறுபாடுகள் காணலாயின. 9180

என்னும் கருத்தும் சுவடிகளில் திருத்தங்கள் பல நிகழ்ந்துள்ளன என்பதை உறுதிப் படுத்தும். இத்திருத்த முறைகளையும் சில சான்றுடன் விளக்கலாம்.

பிரிப்பதாக எண்ணித் திருத்தியவை

"நெடுவெண்ணிலா-வேனல் பூத்த மராம் கோதையோடும்'181 வேறு : "நெடுவெண்ணிலா-ஏனல் பூத்த மராம் கோதையோடும்” வ்வேறுபாடு, பிரித்து

சுட்டப்பெற்றுள்ள

எழுதுவதாக

எண்ணிச் சுவடி எழுதியவர் செய்தது ஆகலாம். இவற்றுள் வேனல்

128. தொல். செய்யுள், 72.

129. தொல். செய்யுள், 72 அடிக்குறிப்பு.

130. சொல்புதிது சுவைபுதிது, பக்.1 131. தேவாரம்-2725.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/156&oldid=1571233" இலிருந்து மீள்விக்கப்பட்டது