உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

143

என்னும் வாக்கியம் பல சுவடிகளில் நாகத்தில் என்று காணப்பட்ட தால் நாகமா, நரகமா என்று பலவாறு சிந்திக்க நேர்ந்தது என்னும் வரலாறு சுவடிகளில் குழப்பம் நிகழ்தற்குச் சிறந்த சான்றாகும்.143 சரபம்- சாபமாகவும், சரடு--சாடு ஆகவும், தரன்-தான் குருதி- குந்தியாகவும் L மாறி மயங்கிய நிலையும்

ஆகவும், காணப்படுகிறது.

மணிமேகலையில்,

எட்டி குமரனிருந்தோன்றன்னை

என்பது எட்டிருமானிருந்தோன்றன்னை எனவும், ஆறறி யந்தணர் என்பது ஆற்றியந்தணர் எனவும் பதிப்பிக்கப்பட்டன என்பர்.14க

'பிரதிசெய்து வந்தவர்கள் ஓரெழுத்தை மற்றோரெழுத்தாகக் கொண்டு எழுதிவிட்டதனாலும், தெரியாத இட தெரியாத இடங்களில் தாமே புதியனவாக எழுதிச் சேர்த்துவிட்டமையாலும் அளவில. பழம் பிரதிகளில் ஈகார வொற்று எழுதப்பட்டிருந்தது...மகர

ஊகித்துப் உண்டான மாறுபாடுகள் ஏகாரங்களின் பின்னர் யகர

ழகரங்கள், ழகரளகரங்கள்,

கொன்று

ககர சகர தகரங்கள், தந் நகர றன்ன

கரங்கள், லகரவகரங்கள், ரகரறகரங்கள் என்பவை ஒன்றனுக் மாறாக எழுதப்பட்டிருக்கும். டு, ரு, கு என்பனவும் அ, கு.சு என்ற மூன்றும் தமக்குள் வேற்றுமை தெரியாதபடி யிருந்தன. ற்ற எனவருமிடங்களில் த்த என்ற பாடம் காணப் பட்டது’”1 4 6 என்ற செய்தி சுவடி எழுத்துக்களில் காணப்படும் குழப்பங்களை எடுத்துக்காட்டுகிறது.

இச்செய்திகள் சுவடிகளில் காணப்படும் புள்ளியில்லா நிலை, கால், கொம்பு ஆகிய எழுத்துத்தன்மை, பிறவாகிய கையெழுத்து வேறுபாடுகள் ஆகியவற்றால் பலவகைக் குழப்பங்கள் தோன்றி, எழுதுவதில் பல வேறுபாடுகளை உண்டாக்கியுள்ளன என்பதைப் புலப்படுத்துகின்றன. இவ்வாறான குழப்பங்களால் நிகழ்ந்துள்ள வேறுபாடுகளுக்குச் சில சான்றுகளைக் காட்டலாம்.

புள்ளியின்மையால் குழப்பம்

பாடம்

வேறுபாடு

துயிலவர் மறந்தனர் -துயில்வர மறந்தனர்

(குறுந்.254)

சுக்ரீபனண்டகடாகம் சுக்ரீபன்ணட கடாகம் (கையேடு பக்.37)

143. சீவகசிந்தாமணிபக். 768.

144. என் சரித்திரம், பக். 763. 145. ஷ. பக். 1019. 146. குறுந்தொகை-முதற்பதிப்பின் முகவுரை, பக். 20.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/159&oldid=1571236" இலிருந்து மீள்விக்கப்பட்டது