உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலபாட ஆய்வு

149

சுவடிகள் பல தலைமுறைகளாக வடிவெடுக்கின்றபோது, பிழைகள், சேர்க்கைகள், விடுகைகள் எனப் பல்வேறு மாற்றங்களோடு தோன்றிவிடுகின்றன. உரையாசிரியர்கள் எழுதியவையும் மாற்றம் பெற்றுவிடுகின்றன. உரையாசிரியர்கள் எழுதிய மூல உரை வேறு, சுவடியில் காணப்பெறும் உரைத் தொடர்கள் வேறு என்ற நிலை ஏற்படுகின்றபோது உரையாசிரியர்களால் எழுதப்பட்ட உண்மைத் தொடர்கள் மூலபாடம் என்ற பெயரையே பெற்றுவிடுகின்றன.

"முற்றத் துறத்தலாவது - சுற்றந்தானே விட்டமையின்

ஒருவாற்றால்

துறந்தாராயினார், நின்ற தம் உடம்பினையுந் துறத்தல்" என்று உரை கூறிய பரிமேலழகர்,

"முற்றத்துறத்தலாவது - துப்புரவில்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார் பின் அவற்றை மனத்தால் துறவாமை என்று உரைப்பாருமுளர்" என்று பிறர் உரையை எடுத்துக் காட்டினார். பிறர் உரையாகக் கூறப்பெற்றதில் துறத்தல் என்று இருக்க வேண்டுவது, குறட்பாவின் தொடரை நோக்கித் துறவாமை என்று எழுதிவிட்டனர். இது பிழையான பாடமே. இங்கு துறத்தல் என்பதே மூலபாடம் என்று கொண்டு பதிப்பித்துள்ளனர்.

மிக முதிர்ந்திறும் எல்லைத்தாயகனி

1

நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்தலின்” என்று பல சுவடி களிலும் காணப்பட்டது. ஒரு சுவடியில் மட்டும் இனிமை செய்யாமையில் என்று காணப்பட்டது. செய்யாமையில் என்பதே பொருளமைதியுடைய பாடம் என்று ஏற்று, செய்தலின் என்பதைப் பாடவேறுபாடாகக் காட்டினார்.2

இவ்வாறு பிழை ஏற்பட்ட இடங்களில் உரையாசிரியர்களின் தொடர்கள் மூலபாடம் என்ற பெயரைப் பெற்றுவிடுகின்றன. இவற்றால் நூலாசிரியர், உரையாசிரியர் ஆகியோர் கூறிப உண்மைத் தொடர்களே மூலபாடம் என்ற பெயர் பெறுகின்றன என்பதை அறியலாம். ஒருவருடைய உரையில் இவ்வாறு பிழைகள் ஏற்பட்டுக் காணப்படும் வேறுபாடுகளைச் சுவடி வேறுபாடு என்று சுட்டுவர். 8 அவ்வாறாயின் மூலநூலில் தோன்றும் வேறுபாடுகளும் சுவடிக்குச் சுவடி வேறுபட்டனவேயாகும். ஆனால் மூலநூல் குறள்.1050, பரிமேலழகர் உரை. வை. மு. கிருஷ்ணமாச்சார்யார் பதிப்பு.

1.

2.

3.

குறள், 1306, பரிமேலழகர் உரை, ஷ. பதிப்பு. அடிகளாசிரியர், தொல்காப்பியப் பதிப்பு.

கோபால

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/165&oldid=1571243" இலிருந்து மீள்விக்கப்பட்டது