உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

சுவடி இயல் வேறுபாடு உரையாசிரியர்களுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டமையின் உரையில் காணும் வேறுபாடுகளை இக்காலத்தவர் சுவடி வேறுபாடு என்று சுட்டினர். அது பொருந்துவதாகாது.

“அப்பால் மூன்று அதிகாரங்களிலும் பிற்காலத்தோராற் செய்யுள், உரை, உதாரணம் என்று இவையெல்லாம் தங்கள் தங்கள் மனம் போனவழியே மாற்றப்பட்டன. தென்தேசப் பிரதிகளில் அலங்காரத்தின் பிற்பகுதி முழுவதும் யாப்பிற் சிலபகுதியும் மூலமும் உரையும் ஒருங்கு பிறழ்ந்து செய்யுட் டொகையோடு மாறிப்போயின”*

என்னும் பதிப்பாசிரியர் கூற்று செய்யுளில் மட்டுமன்றி உரையிலும் வேறுபாடுகள் பல தோன்றியுள்ளன என்பதைச் சுட்டுகின்றது.

மூலபாட ஆய்வு

ஒரே

நூலாசிரியர், உரையாசிரியர்களின் கூற்றுகளும் தொடர்களும், படியெடுப்போரால் காலந்தோறும் வேறுபட்டுவிடுகின்றன. நூலுக்குக் கிடைக்கும் பல சுவடிகளிலும் மூலத் தொடர்கள் வெவ்வேறாக அமைந்து விடுகின்றன. அவற்றில் காணப்பெறும் பலவகைத் தொடர்களையும் ஒப்பிட்டு ஆய்ந்து ஆசிரியரின் மூல பாடம் இதுதான் என்று காண முயற்சி செய்வது மூலபாட ஆய்வு எனப்பெறுகிறது. நூல், நூலாசிரியர், நூலின் காலம், நூல் இடம், பொருளமைதி, தொடரமைதி, நடையமைதி, யாப்பமைதி ஆகியவற்றின் பொருத்தத்திற்கு ஏற்ப, ஆசிரியரின் மூலபாடம் இது தான் என்று முடிவு செய்வது அவ்வாய்வின் முடிவாகிறது. அம்முடிவால் நூல் தெளிவான முழுனம் பெறுகிறது. அம் முழுமையே அவ்வாய்வின் பயனாகிறது.

“ஆசிரியரால் இயற்றப்பெற்ற மூலபாடத்தில் மூலபாடத்தில் பிற்காலத்துப் பிழைகள் உண்டாயின. அவற்றை நீக்கி உண்மை வடிவை நிறுத்துதலே மூலபாட ஆய்வாகிறது.

உண்டான

'நூலாசிரியர், காலம், படியெழுந்த காலம், காலத்தால் உண்டான வேறுபாடுகள் ஆகியவற்றால் மூலத்தின் நிலைபேறு தகுநிலை எனப்படும்

A.

சம்

5.

ம்

6.

வீரசோழியம், பதிப்புரை - பக். 26.

Chambers Twentieth Century Dictionary P. 1 396 B and The Random House Dictionary P. 1468 C Encyclopaedia Britannica Vol. 21 P. 918-B,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/166&oldid=1571244" இலிருந்து மீள்விக்கப்பட்டது