உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

மூலபாட ஆய்வு

“முன்னோர் எழுதிய நூல்களின் உண்மையான மூலச்சொற்கள், அவற்றின் முழுத்தன்மை, அதிகாரபூர்வம் ஆகியவற்றைக்

கண்டு முடிவு செய்ய மேற்கொள்ளப்படும் அறிவியல் ஆய்வு மூலபாட ஆய்வு எனப்படும்”7

"மூலநூலில் ஏற்பட்ட பிழைகளைக் காணும் கண்டுபிடிப்பும், அவற்றை நீக்கும் கலையுமாகிய அறிவியலே மூலபாட ஆய்வு ஆகும்’’3

என்பன மூலபாட ஆய்வு பற்றிய சில கருத்துகள்.

“வரம்பெலாம் முத்தம் தத்தும் மடையெலாம் பணிலம்மாநீர்... கரம்பெலாம் செந்தேன் சந்தக் காவெலாம் களிவண்டீட்டம்" இப்பாடலில் கரம்பெலாம் என்னும் சொல் பல சுவடிகளிலும் பதிப்புகளிலும் கரும்பெலாம் என்றே காணப்பெறுகிறது. வரம்பு, குரம்பு, பரம்பு என்னும் முதல் மூன்று அடிகளின் முதற்சீர்களை நோக்க, எதுகை நடையமைதியாகக் கரம்பெலாம் என்பதே சிறந்த பாடமாகிறது. இப்பாடமும் சில சுவடிகளிலும், பதிப்புகளிலும் காணப்பெறுகின்றது. மேலும் வரம்பு, மடை, குரம்பு, மேதிக்குழி, பரம்பு, சாலிப்பரப்பு, சந்தக்கா ஆகிய இடப்பெயர்களினிடையே கரும்பு என்னும் பொருட் பெயர் அமைவதிலும் கரம்பு என்னும் இடப் பெயரே பொருத்த முடையாதாகிறது. வரம்பெலாம் முத்தம் முதலான உயர்வு நவிற்சிப் பொருள்களுக்கேற்பக் கரம்பெலாம் செந்தேன் என்பதும் உயர்வு நவிற்சியாகப் பொருந்த' கரும்பெலாம் செந்தேன் என்பது தன்மை நளிற்சியாகவே அமைந்து பிறவற்றோடு பொருந்தாத் தன்மையைப் பெற்றுவிடுகிறது. எனவே சொல்தோன்றும் இடம், பொருள், பாநடை, அணிநலம் ஆகிய பொருத்தங்களுக்கு ஏற்ப ஆசிரியரின் பாடம் இதுவே எனத் தேர்ந்தெடுக்க முடிகிறது.

"மாதர்கள் கற்பின் மிக்கார் கோசலை மனத்தையொத்தார்” "மாதர்கள் வயதின் மிக்கார் கோசலை மனத்தையொத்தார்10 இவற்றில் கற்பின், வயதின் என்னும் சொற்களுள் நூலாசிரியர் காலம், நூல்மாந்தர் ஆகிய சிறப்புக்களுக்கேற்பக் கற்பின் மிக்கார் என்பதே ஆசிரியரின் பாடமாகக் கொள்ளப்பெறுகிறது. இவை மூலபாட ஆய்வின் வழி அறியப்படும் உண்மை வடிவங்களாகும்.

1.

8.

9.

10.

Encyclopaedia Americana Vol. 26. Art and Error P. 2.

கம்பராமாயணம், பாலகாண்டம், நாட்டுப்படலம்-2.

ஷை

- 12.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/167&oldid=1571245" இலிருந்து மீள்விக்கப்பட்டது