உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இ.

மூலபாட ஆய்வியல்

சுவடி இயல்

நூலின் அகச் செய்திகள், பலவகையிலும் துணைநிற்கும் புறச் செய்திகள் ஆகியற்றின் துணைகொண்டு செய்யப்பெறும் மூலபாட ஆய்வினை மேற்கொள்ளும் முறைகள், அவ்வாய்வின் தன்மைகள், அல்லது கொள்கைகள், ஆய்வின் வகைப்பாடுகள், ஆய்வின் முடிவு களைக் காணும் அடிப்படைகள், அம்முடிவுகளின் அம்முடிவுகளின் பயன் ஆகிய வற்றை அறிவதும் அறிவிப்பதுமாகிய அறிவியற் கல்வி அல்லது பயிற்சி மூலபாட ஆய்வியல் ஆகிறது.

ஈ. மூலபாட ஆய்வின் தோற்றமும் வளர்ற்சியும்

அ. பொது : ஐரோப்பிய நாடுகளில் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளிலேயே மூலபாட ஆய்வுக்கலை உருவாகியுள்ளது. ஹிப்ரூ மொழியில் எழுதப்பெற்றுப் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பெற்ற விவிலிய நூலின் மூல பாடங்களை ஆய்ந்தறியும் நோக்கத்திலேயே இக்கலை தோன்றியுள்ளது. அந்த நூலில் இடைக்காலத்தில் ஏற்பட்ட பிழைகளை நீக்கி அதன் உண்மைத் தன்மையை நிலை நிறுத்த இவ்வாய்வு பயன்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றுள்ளது.

11

தொடர்கள்

அரசு ஆணைகளிலும் சான்றிதழ்களிலும் பிறப்பிக்கப்பெற்ற உண்மைத் பிழையின்றி வெளியாகின்றனவா என்பதைக் கண்காணிக்கப் பயன்படுத்திய போது இக்கலையைச் சாசனவியல் என்று வழங்கியுள்ளனர். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜீன் மாபில்லன் முதலான மௌரிஸ்ட் துறவியர் இச் சாசனவியலை உருவாக்கிப் உருவாக்கிப் புனித நூலியல் தொகுப்பு வரிசை ஒன்றினைப் பதிப்பிக்கத் தொடங்கினர். ஆனால் பெல்ஜியம் நாட்டு இயேசு சங்கத்தைச் சேர்ந்த ஜீன் போலண்ட் முதலான அறிஞர்கள் அத்தொகுப்பு வரிசை அதிகார பூர்வமற்ற நூல்களை ஆதாரமாகக் கொண்டு வெளியிடப்பெறுகிறது என்று குறை கூறினர். அதற்கு மறுப்பாக மாபில்லன், சாசனவியல் என்ற நூலை எழுதி வெளியிட்டார்.

1681 இல் வெளியான

அந்நூல் மூலபாட ஆய்வுக் கலையில் வெளியான முதல் நூலும், மிகப்பெரிய அளவிலான நூலும் ஆகும்.1

1967இல் வெளியாகியுள்ள ராண்டம் அவுஸ் அகராதி, 1972இல் வெளியிடப்பட்ட பிரிட்டானிகா பேரகராதி ஆகியவற்றாலும்

11.

Encyclopaedia Americcanna Vol 3. PP. 658-59,

12. மூலபாட ஆய்வியல், பக். 11 - 12.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/168&oldid=1571246" இலிருந்து மீள்விக்கப்பட்டது