உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலபாட ஆய்வு

153

இக்கலை பற்றிய வரலாற்றினை அறியமுடிகிறது. அவையும் (மிகப் பழமையான) மேனாட்டுச் செய்திகளையே விளக்குகின்றன. நம் நாட்டில் மூலபாட ஆய்வுக்கலை : பூனாவிலுள்ள பண்டார்க்கர் கீழைக்கலை ஆராய்ச்சி நிலையம் 1-4-1919இல் மூல பாட ஆய்வுக்கலை, ஆய்வுப்பதிப்பு ஆகியவற்றைப் பற்றி விரிவான திட்டமொன்றினை வகுத்தது. தொடர்ந்து பதிப்பித்தும் வருகிறது.18

பூனா, தக்காணக் கல்லூரியும் இவ்வாய்வினை மேற்கொண்டு பலநூல்களை வெளியிட்டு வருகிறது.

புதுவைப் பிரஞ்சு நிறுவனம் (பாண்டிச்சேரி) இக்கலையின் அடிப்படையில் மிக ஆழ்ந்து ஆய்வு செய்து, சந்திபிரித்துப் பதிப்பித்தல் முறையையும் மேற்கொண்டு தேவாரப் பண்முறைப் பதிப்பில் ஈடுபட்டுள்ளது. 1984இல் முதற் பகுதியினை 150 பக்க விரிவான முன்னுரையுடன் வெளியிட்டுள்ளது.

இ. தமிழ் நாட்டில் மூலபாட ஆய்வுக்கலை-உரையாசிரியர்கள் : தமிழ் நூல்களைப் பொறுத்தவரை மூலபாட ஆய்வு என்ற தொடர் கையாளப்பெறவில்லையே தவிர, மூலபாட ஆய்வினை உரையாசிரியர்கள் மிக நுட்பமாகக் கையாண்டுள்ளனர். உரிய பாடத்தைக் காரண காரியங்களோடு நிறுவி அதற்கு உரை கண்டுள்ளனர். பிறபாடங்களை மறுத்தும், ஏற்றும் விளக்கம் கூறியுள்ளனர். உரையாசிரியர்கள் தொல்லோர் பாடங்களை ஆய்ந்தறிந்து உரை வகுத்த முறையினை, உடனிருந்து அறிந்த சான்றோர் அவர்களது மூலபாட ஆய்வு முறையினைப் பாராட்டி யுள்ளனர். இச்செயல்கள் அனைத்திற்கும் சான்றுகள் கிடைக்

கின்றன.

பரிமேலழகரின் மூலபாட ஆய்வுத்திறன் : கந்தி என்பவர் சான்றோர் பாடல்களின் இடையே தம்முடைய சில பாடல்களை யும் செருகிவந்துள்ளார். மேலும் எழுத்தின் வடிவத்தால் ஒத்து வரும் சில சொற்கள் பாடியவர்களாலும் எழுதியவர்களாலும் பிழைபட உணர்ந்து பாடப்பெற்றும் எழுதப்பெற்றும் வந்துள்ளன. இவ்வாறு பல்லாற்றானும் பொருந்தாப் பாடங்கள் பல சான்றோர் நூல்களிடையே தோன்றிவிட்டன. அவற்றை நுட்பமாக அறிந்து இடைச் செருகல்களையும் பிழைகளையும் களைந்து, சான்றோர் 13. Maha Bharata, The Bhandarkar Oriental Research Institute, Poona.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/169&oldid=1571247" இலிருந்து மீள்விக்கப்பட்டது