உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

சுவடி இயல்

பரிமேலழகரின்

பாடிய உண்மைப் பாடங்களை நிறுவி அவற்றிற்கு உரை கண்டார் என்னும் பரிபாடலின் உரைப்பாயிரப்பகுதி. மூலபாட ஆய்வின் திறத்திற்குச் சான்றாகிறது. "பாடிய சான்றோர் பீடுநன்கு உணர மிகைபடு பொருளை நகைபடு புன்சொலில் தந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும் எழுதினர் பிழைப்பும் எழுத்துரு ஒக்கும் பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும் ஒருங்குடன் கிடந்த ஒவ்வாப் பாடம்... மதியின் தகைப்பு விதியுளி யகற்றி எல்லையில் சிறப்பின் தொல்லோர் பாடிய அணிதிகழ் பாடத்துத் துணிதரு பொருளைச் சுருங்கிய உரையின் விளங்கக் காட்டினன்... பரிமே லழகன் உரிமையின் உணர்ந்தே"

என்பது பரிமேலழகரின் மூலபாட ஆய்வினை எடுத்துக் காட்டிய சான்றோர் கூற்று. பரிமேலழகர் உரிய பாடத்தைத் தேர்ந்து, பிறர்கொண்ட வேறுபாடத்தைச் சுட்டுங்கால் அப்பாடமும் பொருந்தும் என ஏற்றும், அப்பாடம் பொருந்தாதென மறுத்தும் கூறும் இடங்கள் அவர்தம் மூலபாட ஆய்வுக்கு எடுத்துக்காட்டு களாகும்.

அளவிறந்து -ஆவது போலக் கெடும்' (குறள்-283) என்பது அவர் கொண்டபாடம். 'அளவறிந்து' என்று பாடமோதி, அவர் பயன்கொள்ளும் அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும் என்று உரைப்பாரும் உளர் என்று பிறர் பாடத்தை எடுத்துக் காட்டி பொருந்து மாற்றினைச் சுட்டினார்.

'சிறுமை - பெருமிதம் ஊர்ந்து விடல்' என்று பாடம் கொண்ட பரிமேலழகர், 'விடும் என்று பாடம் ஓதுவாரும் உளர்; முற்றுத் தொடரும் எழுவாய்த் தொடரும் தம்முள் இயையாமையின் அது பாடமன்மைஉணர்க' என்று பிறர் பாடத்தை எடுத்துக் காட்டி மறுக்கிறார். (குறள் - 979)

அடியார்க்கு நல்லார்:

1

நாவொடு நவிலாது நவைநீர் உகுத்து' என்னும் அடிக்கு நவை-குற்றம், நவநீர்-புதியநீர் என்பாருமுளர் என்று காட்டியுள்ளதும் உரையாசிரியரின் மூலபாட ஆய்வின் திறத்தையே சுட்டும்.

14. பரிபாடல் - உரைப்பாயிரம்.

15.

சிலப்பதிகாரம், 5;137,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/170&oldid=1571248" இலிருந்து மீள்விக்கப்பட்டது