உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலபாட ஆய்வு

நச்சினார்க்கினியர்:

இருகவி கூறுவாருமுளர்.

155

இதன்பின் என்றவன் சேட்டிளம் என பயில வழங்கா ' அவை

951

என்னும் நச்சினார்க்கினியர் கூற்று, இடைச் செருகல்களைக் கண்டு விலக்கிய மூலபாட ஆய்வு நெறியின் விளைவாகும்.

சேனாவரையர்: "பெண்டன் கிளவி என்று பாடமோதி அவ்வாட்டி, இவ்வாட்டி, உவ்வாட்டி என்பாருமுளர்’'`'

"ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும்" என ஒரு சூத்திரமாக உரையாசிரியர் பிரித்தாராலெனின்.. அது

போலியுரையென்க”18

'சி

சிறுவனை யானை யென்றலும் ஒன்றன்பெயர் ஒன்றகாதல் ஒப்புமையான் ஆகுபெயரென்பாருமுளர்.'1°

"ஈங்ஙன' மென்று பாடமோதுவாருமுளர்"20

என மூலபாடத்தைத் தேர்ந்தெடுத்தபின் பிறபாடங்களைச் சுட்டிக் காட்டினார் சேனாவரையர். இவை முறையே பாடவேறுபாடு கள், நூற்பா அமைப்பு வேறுபாடுகள், உரைவேறுபாடுகள் ஆகிய வற்றையும் நுணுகி ஆய்ந்து நூலாசிரியரின் மூலபாடத்தை யும் கருத்தையும் உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

இவ்வாறு தமிழ் இலக்கிய இலக்கணங்களில் உரையாசிரியர்கள் காலத்திலேயே மூலபாட ஆய்வுமுறை தோன்றி மிகநுட்பமான ஆய்வு நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகிறது. பிற்கால உரையாசிரியர்களும் பதிப்பாசிரியர்களும் இவ்வாய்வினை ஒரு தனிக்கலையாக உருவாக்கவில்லையாயினும் இவ்வாய்வினை

முறையாகக் கையாண்டு வருகின்றனர்.

இக்கால மூலபாட ஆய்வுமுறை

மிகப்பெரிய சுவடி

அரசினர் சுவடி நூலகம்: தமிழ்நாட்டில் நிறுவனமான சென்னை, அரசினர் சுவடி நூலகம், சுவடிப்பதிப்புப் பணியினை மேற்கொண்டு அறுபத்திரண்டு தமிழ்நூல்களை வெளியிட்டிருக்கிறது. இவைதவிர ஆறுமாதத்திற்கு ஒருமுறை யாக வெளியாகும் நூலக மலரின் வழி சுமார் நாற்பது சிறு நூல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. வடமொழி, தெலுங்கு, மலையாளம்,

16.

17. 18.

19.

20.

சீவகசிந்தாமணி, 442, உரை

தால், சொல். சேனாவரையம் - 163.

ஷை

ஷை

ஷை

54

- 56

. 163.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/171&oldid=1571249" இலிருந்து மீள்விக்கப்பட்டது