உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

சுவடி இயல்

கன்னடம், உருது, அராபி ஆகிய மொழிகளிலும் பலநூல்கள் இந் நூலகத்தின் வழி வெளிவந்துள்ளன. ஆனால் இவற்றுள் பல நூல்கள் மூலபாட ஆய்வு முறையினை மேற்கொள்ளாமல் சுவடி களில் உள்ளவாறு பதிப்பிக்கப்பெற்று வெளியாகியுள்ளன.

பிறநூலகங்கள் : திருவான்மியூரிலுள்ள உ.வே. சாமிநாதையர் நூலகம் மூலபாட ஆய்வினை முறையாகப் பின்பற்றிப் பலவகை விளக்கங்களோடு இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது.

தஞ்சை சரசுவதிமகால் நூலகமும் சுவடிப்பதிப்பினை மேற் கொண்டு சுமார் நாற்பது நூல்களை வெளியிட்டுள்ளது.

பல்கலைக் கழகங்கள் : அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவ்வாய்வு முறையினைப் பின்பற்றிக் கம்பராமாயணம் முழுவதை யும் தனித்தனி காண்டங்களாகவும், சில காண்டங்களை இரண்டு பகுதிகளாகவும் பதிப்பித்துள்ளது. மேலும் தொல்காப்பியம், யாப்பருங்கலக்காரிகை, அகப்பொருள் விளக்கம், ஐங்குறுநூறு ஆகிய நூல்களையும் பதிப்பித்துள்ளது.

மதுரை, காமராசர் பல்கலைக்கழகம், மூலபாட ஆய்வினை

மேற்கொண்டு சுவடிகளைப் பதிப்பிக்க ாக்டர் பட்டமும் எம்.ஃபில் பட்டமும் வழங்கிவருகிறது. இம்முறையில் முதன் முதலில் பதிப்பிக்கப்பெற்ற நூல் ஐவர் அம்மானை ஆகும். மதுரை வீரன் அம்மானை. மாவைப்பள்ளு, பவளக்கொடி நாடகம் ஆகிய பதிப்புகளும் தொடர்ந்து நடைபெற்றுள்ளன.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகம், முறையான சுவடிப் பதிப்புகளை உருவாக்கும் திட்டத்தில், சுவடிப்புலம் என்னும் தனித் துறையை உருவாக்கியுள்ளது. அதிலும் ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள் ஆகிய இரண்டு வகைக்குமாக இருபிரிவுகளை அமைத்துப் பெருமளவில் செயல்பட்டு வருகிறது.

கல்லூரி : பேரூர், சாந்தலிங்க அடிகளார் தம் எம்.ஃபில் மாணாக்கருக்குச் சுவடிப்பதிப்பு உருவாக்கித்தந்து பட்டம் வழங்கிவருகிறது.

தமிழ்க்கல்லூரி,

முறையினை

சென்னை, உலகத்தமிழா

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் : ராய்ச்சி நிறுவனம் முதன்முதலாகச் 'சுவடிஇயல் பயிற்சி வகுப்பு' என்ற வருப்பினை 1979, அக்டோபர் மாதம் தொடங்கியது. மூல பாட ஆய்வினை முறையாகப் பின் பற்றி இதுவரை இருபது நூல் களையும்,நாற்பதிற்கு மேற்பட்ட ஆய்வேடுகளையும் உருவாக்கி

யுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/172&oldid=1571250" இலிருந்து மீள்விக்கப்பட்டது