உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலபாட ஆய்வு

157

பவானந்தம் அகாடமி, எஸ். ராஜன் - வெளியிடுவோர், கம்பன் கழகம் ஆகிய தனியார் நிறுவனங்களும் இத்துறையில் வழிகாட்டி யுள்ளன. மூலபாட ஆய்வின் வளர்ச்சிநிலைக்காக முறையான நிறுவனங்கள் மட்டுமே சுட்டப்பெற்றன.

இங்கு தனியார்

மேற்கொண்ட பதிப்புமுறைகள், பதிப்புக்கலை முன்னோடிகள் என்னும் தலைப்பில் ஆய்வு செய்யப்பெறுகின்றன.

3. மூலபாட ஆய்வுமுறை

மூல

முன்னுரை : கிடைக்கும் சுவடிகளை வகைப்படுத்தி ஏடாக ஒன்றினைத் தேர்ந்தெடுக்க லேண்டும். பிறசுவடிகளை வழி ஏடுகளாக வரிசைப்படுத்தி, ஒப்பிட்டுப் பாடவேறுபாடுகளைக் காண வேண்டும். அவற்றுள் உண்மையான பாடம் எது அல்லது சிறந்த பாடம் எது என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இம் முறைகளை ஆய்வு செய்து தெளிவுபடுத்துவதே இப்பகுதியின் நோக்கமாகும்.

அ.சுவடிகளை வகைப்படுத்தும் முறை

யூகமூலஏடு : நூலாசிரியரால் எழுதப்பெற்ற சுவடி மூலச் சுவடி எனப் பெறுகிறது. நூலாசிரியர் சொல்லப் பிறரால் எழுதப்பெற்றதும் ஆசிரியர் எழுதியதைப் பார்த்து எழுதப்பெற்றது மாகிய சுவடிகளாயினும் ஆசிரியரால் திருத்தப்பெற்றிருக்குமே யானால் அவையும் மூலச்சுவடிகளாகும். மூலப்படியிலிருந்து படியெடுக்கப் பெற்றவை அண்மைப்படிகள் ஆகின்றன. அண்மைப் படிகளிலிருந்து பின்னால் பல நிலைகளில் படியெடுக்கப்பெற்றவை வழிஏடுகள் ஆகின்றன. கீழ்வழிஏடு ஒன்றினைக்கொண்டு அது எந்த ஏட்டின் வழி வந்தது என்பதைக் காணும்போது, அதன் மூல ஏடுகளின் வரிசை மேல் வழிஏடுகள் எனப்பெறுகின்றன. வழிஏடுகள் சிலவற்றின் துணைகொண்டு ஒப்பிட்டு எழுதப்பெறும் ஏடு கலப்பு வழிஏடு ஆகிறது. இவற்றுள் பலவகை ஏடுகள் கிடைத்து, மூலப்படி கிடைக்காத நிலையில், கிடைத்த ஏடுகளின் வரிசை முறையை ஆய்ந்து, மேலேட்டு வரிசை முறையில் முதல்நிற்பதையே ஏடாகக் கருதி இவ்வாய்வினை மேற்கொள்ளவேண்டியுள்ளது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பெறும் மூலஏடு, உண்மையான மூலப்படி அன்று ஆதலின் அது யூகமுலஏடு என்று கொள்ளப்பெறுகிறது. வ்வாறு அமையும் ஏட்டுவரிசைகளை வரைபடங்களின் மூலம் தெளிவுபடுத்தலாம்.

மூல

படம் ஒன்றின்படி, மூ = மூலப்படி. அதிலிருந்து படியெடுக்கப் பெற்ற அ, ஆ இரண்டும் அண்மைப்படிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/173&oldid=1571251" இலிருந்து மீள்விக்கப்பட்டது