உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

சுவடி இயல்

இ. ஈ, உ ஆகியவை 'அ' என்னும் அண்மைப்படியிலிருந்து படி யெடுக்கப்பெற்ற கீழ்வழி ஏடுகள். ஊ, எ, ஏ என்பன ‘ஆ' ஆ' என்னும் அண்மைப்படியின் வழிவந்த கீழ்வழி ஏடுகள்.

இ-ஏ என்னும் சுவடி ஒவ்வொன்றிலிருந்தும் வழிஏடுகள் பல தோன்றக் கூடும்.

இவ்வாறே கீழ்

ஐ,ஓ என்பன உ வின் வழியும், ஓ, ஒள என்பன ஊ வின் வழியும் தோன்றிய கீழ்வழி ஏடுகளாகும். ஒ என்ற ஒரு ஏட்டினைக் கொண்டு நோக்குவோமாயின் ஐ,உ,அ, மூ என்பன அதன் மேல்வழி ஏடுகளாகின்றன.

வழி ஏடுகள்

படம்-1 மூ

-

ஈஈ

¡

1

தள

ஒள

இவ்

படம் இரண்டின்படி அ, ஆ ஆகியவை அண்மைப்படிகள். அவற்றின் கீழ்வழி ஏடுகள் ஐ, ஒ ஆகிய இரண்டும். இவ்விரண்டின் துணையோடு தோன்றிய 'ஒள' கலப்பு வழிஏடு ஆகிறது. வரிசையில் உ, ஐ, ஒள என்னும் மூன்று ஏடுகள் மட்டுமே கிடைக் கின்றன என்றால், ஒளவின் மேலேடு ஐ; ஐயின் மேலேடு 'உ' எனத் தேர்ந்தெடுக்கப்பெற்று அதற்கு மேலேடு கிடைக்காமையின் உ என்னும் ஏடே யூக மூலப்படியாக அமைய அதன்வழி ஆய்வு மேற் கொள்ளப்பெறுகிறது.

F

T

படம்-2 மூ

T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/174&oldid=1571253" இலிருந்து மீள்விக்கப்பட்டது