உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

சுவடி இயல்

விடுகைவழிக் குடும்பம் : இரண்டு அல்லது சில ஏடுகளில் சொற்களோ தொடர்களோ பாடல்களோ குறிப்பிட்ட சில, பல இடங்களில் ஒன்றுபோல விடுபட்டிருக்கலாம் அல்லது முன்பின்னாக மாறி அமைந்திருக்கலாம். இவ்விடுகைகளும் மாற்றங்களும் எல்லா ஏடுகளிலும், குறிப்பிட்ட எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக அமைவது தற்செயலாக நிகழ்ந்திருக்க முடியாது. எனவே இவ்வேடு கள் இதே விடுகைகளையும் மாற்றங்களையும் பெற்றுவிட்ட ஒரே மூலஏட்டினைப் பார்த்து எழுதப்பெற்றவையாகவோ ஒன்றைப் பார்த்து ஒன்றாக எழுதப்பெற்றவையாகவோ இருத்தல் வேண்டும். எனவே இவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என வரையறுக்க முடிகிறது. இதனை விடுகைவழிக் குடும்பம் அல்லது இன்மைவழிக் குடும்பம் எனலாம்.

சேர்க்கைவழிக் குடும்பம் : இதே அடிப்படையில் இரண்டு அல்லது சிலசுவடிகளில் கூடுதலான சிலசொற்கள் அல்லது தொடர் கள் அமைந்து பொருந்தியிருக்கலாம். ஒன்றிரண்டு பாடல்கள் கூடுதலாக அமைந்திருக்கலாம். பாடவேறுபாடுகள், பிழைகள் ஆகியவை காணப்படலாம். இக்கூடுதல் தொடர்களும் பாடல் வேறுபாடுகளும் ஒன்றுபோல எல்லா இடங்களிலும்

களும்

பொருந்தியிருக்குமாயின்

அச்சுவடிகள் அனைத்தும் ஒரு மூல ஏட்டின் வழிவந்த ஒருகுடும்பத்தைச் சேர்ந்தவையாக வரையறுக் கலாம். இதனைச் சேர்க்கை வழிக் குடும்பம் அல்லது உண்மைவழிக் குடும்பம் என்று கூறலாம்.

ஒத்தல்வழிக் குடும்பம்: விடுகைகள் மட்டுமே ஒரு குடும்பத் திலும் சேர்க்கைகள் மட்டுமே ஒரு குடும்பத்திலும் இருக்கும் என்று கூறமுடியாது. சில விடுபட்டிருக்கலாம்; சிலவிடத்து சேர்க்கைகள் நிகழ்ந்திருக்கலாம். இவ்விரண்டு முறைகளும் ஆங்காங்கு அமைந்தே காணப்படும். ஒன்றுபோல ஒத்திருக்கும் இவற்றையும் ஒத்தல் வழிக் குடும்பம் என ஒருதனிக் குடும்பமாகப் பிரித்தறியலாம்.

குடும்பவழிமுறை என்பது மேற்கூறிய மூன்று வகையில் அடங்குமாயினும் ஒருவகையான விடுகைகள் அல்லது மாற்றங்கள் சில சுவடிகளில் பொருந்தியிருக்கும். வேறொருவகையான விடுகைக களும் மாற்றங்களும் சில சுவடிகளில் பொருந்தியிருக்கும். இதே நிலையில் கூடுதல் தொடர்களோ பாடல்களோ வேறுபாடுகளோ ஒருசில சுவடிகளில் ஒரேமாதிரியாகவும், வேறுசில சுவடிகளில் வேறொரு மாதிரியாகவும் பொருந்தியிருக்கக்கூடும். வை ஒவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/176&oldid=1571255" இலிருந்து மீள்விக்கப்பட்டது