உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலபாட ஆய்வு

161

வொன்றும் ஒரு குடும்ப வழியைச் சார்ந்ததாகக் கொண்டு ஒவ்வொன்றையும் இரண்டிரண்டு வகைகளாகவும் பிரிக்க

நேரிடலாம்.

மூன்றாவது படம் காட்டும் வரிசையினைக் குடும்பவழி முறைக்கு எடுத்துக் காட்டாக விளக்கலாம்.

ஈ, உ,

மூலச்சுவடியிலிருந்து அ,ஆ என்னும் அண்மைப்படிகளும் இ, உ, ஊ ஆகிய வழிப்படிகளும் உருவாயின. பிறகு இ என்னும் சுவடியிலிருந்து க, ங, ச, ஞ என்ற நான்கு சுவடிகளும் ஈயிலிருந்து ட, ண, த என்ற மூன்று சுவடிகளும் படியெடுக்கப்பட்டன. இதே போல உ, ஊ ஆகிய அண்மைப்படிகளிலிருந்தும் முறையே ந, ப,ம, என்ற மூன்றும், ய, ர, ல என்ற மூன்றும் எழுதப்பட்டன. இவற்றுள் அ முதல் ஊ வரையிலான அண்மைப்படிகளும் வழிஏடுகளும் கிடைக்காத நிலையில் கீழ்வழியேடுகள் க-ல-பதின்மூன்றும் கிடைக்

கின்றன. இப்போது விடுகைவழி, சேர்க்கை வழி முறைகளில்

ஆய்ந்து வகைப்படுத்தினால் நான்கு, மூன்று என்ற அளவில் நான்குவகைக் குடும்பங்கள் கிடைக்கும். இவற்றைப் பொதுவாக ஒத்தல்வழிக் குடும்பங்கள் எனலாம்.

வழிஏடுகள் தோன்றுவதில் வேறொரு வகையாகவும் தோன்றக் கூடும் என்பதை நான்காவது படம் விளக்குகிறது முறைமாறி னாலும் க, ங, ச, ஞ என்பன 'இ'யின் வழியேடுகளே. இது போலப் பிறவழி ஏடுகளும் ஒன்றையொன்று பார்த்து எழுதப்பெற்றும் தோன்றலாம்.

இ சுவடிகளின் காலம் அறிதல்

இவற்றுள் காலத்தால்

முந்திய சுவடி எது என்பதையும்,

காண

திருத்தமான, முழுமையான சுவடி எது என்பதையும் வேண்டும். சுவடியின் தொடக்கம் அல்லது முடிவில் காணப்பெறும் சுவடி எழுதியது பற்றிய குறிப்புகளால் காலம், அதன் முன்ஏடு ஆகியவற்றை அறியலாம்.

920ஆம் ஆண்டு குரோதனவருஷம், சித்திரை மாசம் 15ஆம் தேதி முதல், சிந்தாமணி, திருநெல்வேலி தம்பா பிள்ளையன் அவர்கள் ஏடு பார்த்து எழுதின, ஸ்ரீவைகுண்டம், சிவசங்கரம் பிள்ளையவர்கள் ஏடு பார்த்து இராமாயணம் திருவேங்கடம் எழுதுவித்து எழுதின ஏட்டின் படிக்கு முதற் புத்தகம் பிழைபார்த்து முடிந்தது. 21. சீவகசிந்தாமணி, அவர்கள் ஏடு)

சுவ. -- 11

521

முகவுரை. (வானமாமலைத்தாதர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/177&oldid=1571256" இலிருந்து மீள்விக்கப்பட்டது