உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

சுவடி இயல் ஆங்கிரச வருஷம், சித்திரை மாதம், 9ஆம் தேதி சோம வாரம் திருதியை...... எழுத ஆரம்பம். ஷை.வருஷம் வைகாசி மாதம், 29ஆம் தேதி புதவாரமும் ரேவதி நட்சத்திரமும் பெற்ற சுபதினத்தில், திருச்சிராப்பள்ளியிலிருக்கும் குமாரசாமி வாத்தியார் குமாரர் வேலாயுத வாத்தியார் சேலத்திலிருக்கும் அட்டாவதானச் சொக்கநாத முதலியாரவர்கள் (தஞ்சை வாணன்கோவை உரையாசிரியர்)

எழுதியது.

1982 2

மேலேடு

பார்த்து

சுவடிகளின் இறுதியில் காணப்பெறும் இத்தொடர்கள் சுவடியின் காலமும் முன்ஏடும் அறியத் துணைபுரிகின்றன.

இக்குறிப்புகள் கிடைக்கவில்லையானால் சுவடியின் நிலை பிழை, வேறுபாடுகளின் மிகுதி, விடுகை போன்ற அகச் சான்று களால் றுதிப்படுத்தலாம். அதாவது ஏடுகள் மிகப் பழமை யானவை -ஓரளவு புதியவை என்ற வேறுபாடுகளால் சுவடிநிலை கொண்டு முந்திய சுவடி, பிந்திய சுவடி என்று அறியலாம். ஒரு சுவடியிலுள்ள பிழையோ வேறுபாடோ மற்றொன்றிலும் இருந்து மேலும் சில பிழைகள், வேறுபாடுகள் தோன்றியிருப்பின் பிழை மிகுதியான சுவடியைப் பிந்திய சுவடியாகக் கொள்ளலாம். ஒரு சுவடியில் நன்கு அமைந்துள்ள ஒரு பாடல் அல்லது ஒன்றிரண்டு அடிகள் மற்றொன்றில் விடுபட்டிருந்தால், விடுபட்ட சுவடி முந்திய தாக இருக்கவே முடியாது என்று உணரலாம். அதே சமயம் பிழை மிகுந்தது பிற்காலச் சுவடி; பிழையற்றது அல்லது பிழை குறைந்தது முந்தைய சுவடி என்ற ஒரே முடிவையும் கொண்டுவிட முடியாது. பிழையற்ற ஒன்றினைப் பார்த்துப் பிற்காலத்தில் படியெடுக்கப் பெற்றது அதன் மூலச் சுவடியை ஒத்துப் பிழையின்றியிருக்கலாம். அதன் மூலச் சுவடி கிடைக்காமல் பின்னால் படியெடுக்கப்பெற்றதே கிடைக்க, பிழை மிகுந்தது மிகப் பழையதாகவும்

அமையலாம். இவற்றில் காலத்தை நோக்காது, தூய்மையையே கருதி முதல் வரிசையில்-யூக மூலப்படியாக வைக்கலாம்.

ஈ.

சுவடிகளை வரிசைப்படுத்துதல்

யூகமூலப்படியை யும் அடுத்த வழி ஏடுகளையும் வரிசைப் படுத்தி எண்கொடுக்கவேண்டும். அல்லது கிடைத்த இடத்தைக் கொண்டோ கொடுத்தவர் பெயரைக் கொண்டோ சுருக்கக்குறியீடு கள் கொடுத்தும் வரிசைப் படுத்தலாம்.

22. ஷை முகவுரை, (சேலம், இராமசாமி முதலியார் அவர்கள் ஏடு)

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/178&oldid=1571257" இலிருந்து மீள்விக்கப்பட்டது