உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

மூலபாட ஆய்வு

-காக

1- மூலப்படி ; 2, 3, 4, 5, வழியேடுகள். அல்லது

அ - சுவடி (அல்லது) அ -நூ - அரசினர் சுவடி நூலகச் சுவடி

உ.வே.சா

நூ

உ.வே.சா. நூலகச் சுவடி

தஞ்சை - தஞ்சை, சரசுவதிமகால் நூலகச் சுவடி.

திருநெல்வேலி - தனியார்:

த. ச. - தமிழ்ச் சங்கச் சுவடி. என்பனபோல வசதியான, எளிமையான முறையில் குறியீடுகள் கொடுத்துச் சுவடிகளை அறிய வழிவகுக்கலாம். மூலப்படியுடன் ஒவ்வொரு படியாக வைத்து ஒப்பிடவேண்டும். மூவர், நால்வர் இவ்வாய்வுப் பணிக்கு உதவி செய்பவர் இருந்தால் ஒரே சமயத்தில் ஒவ்வொருவரும் ஒரு கவடியை வைத்துக் கொள்ள - மூலப்படியுடன் ஒப்பிடலாம். அவரவர் சுவடியில் காணும் வேறுபாடுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஆசிரியரின் உண்மைப் பாடம்-இது- முடிவுசெய்து தேர்ந்தெடுக்க வேண்டும். பிறருடன் சேர்ந்து ஒப்பிடும்போது, பதிப்பாசிரியருடன் ஒப்பிடுவர் உண்மை யிலேயே சுவடியில் அனுபவமும் ஆர்வமும் உள்ளவராகவும், பதிப் புத்தூய்மையில் அக்கறை உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். உ. வேறுபாடுகளைக் குறித்தல் : கிடைத்துள்ள வேறுபாடுகளைக் குறிக்கும் முறை - சான்றுகள்:

என்பதை

"கூற்றுண் டோசொலாய் கூற்றுறழ் வேலினாய்’98

வேறு: 1. கூற்றுண்டோ சொல்க

வேறு:

2. கூற்றுண்டோ சொலும்

3. கூற்றுண்டோ சொலை

4.

கூற்றுண்டோ உரை

5. கூற்றுண்டோ சொலக் கூற்றுறழ்.

"சூல மற்றன துண்டங்கள் கண்டனர்”24

சூலம் அற்றுறு துண்டங்கள்

2.

3.

4.

சூலம் அற்றிரு துண்டங்கள் சூலம் அற்றதன் துண்டங்கள்

சூலம் இற்றதன் துண்டங்கள்

பல சுவடிகளிலிருந்து வேறுபாடுகளைக் குறிக்கும்போது இவ்வாறு முழுத் தொடராகக் குறிப்பது ஆய்ந்து பொருளறிய எளிமையாக

23.

பாலகாண்டம். 7-63.

24. Cng. 7:69.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/179&oldid=1571258" இலிருந்து மீள்விக்கப்பட்டது