உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

சுவடி இயல் இருக்கும். மீண்டும் சுவடியைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படாது. ஆய்வு விரைந்து நடைபெறும்.

4. மூலபாடத் தேர்வுமுறை : முதல்நிலைப் படியாக - யூக மூலப்படியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட சுவடிக்கும், பிற சுவடி களுக்குமிடையே எழுத்து, சொல், தொடர், அடி, பாடல், பொருள் எண், இடம் ஆகிய பலவகைகளில் வேறுபாடுகள் காணப்படலாம். இவ்வேறுபாடுகளை ஐந்து வகையான பெரும்பிரிவுகளாகப் பிரித்து அறியலாம்.

1.

எழுதியவர்களால்

பிழையான

ஏற்பட்டபிழை 2. பொருத்தமற்ற,

பாடம் 3. ஓரளவு பொருத்த முடைய பாடம் 4. இடைச் செருகலாக நுழைந்து பொருந்திவிட்ட பாடம் 5. நூல், ஆசிரியர், காலம் ஆகியவற்றிற்கு ஏற்ற, ஆசிரியரின் உண்மையான பாடம் என்பன அவ்வேறுபாடுகளின் வகைகளாகும்.

எழுத்து, சொல், தொடர்... ஆகிய எவ்வகை வேறுபாடுகளா யினும் ஆசிரியரின் உண்மையான பாடம் என்று ஏற்றவற்றை நூலிற் பதிப்பிக்க வேண்டும். இடைச் செருகல்கள், ஓரளவு பொருத்தமுடைய பாடங்கள் ஆகியவற்றை வேறுபாடுகளாகச் சுட்டிக்காட்டவேண்டும். எழுதினோர் பிழை, பொருத்தமற்றவை என்று முடிவு செய்தவற்றை நீக்கலாம். அல்லது அவை ஆய்வுக்குப் பயன்படுமென்று கருதினால் தனியே அட்டவணையிட்டுக்

காட்டலாம்.

மூல பாடத்

தேர்வுக்கான துணைக்கருவிகள் : இவ்வகை களை மனத்துட்கொண்டு சுவடிகளைத் தேர்ந்தெடுத்து வகைப் படுத்தி மூலபாட ஆய்வினை மேற்கொள்ளும் போது மூன்றுவகை யான கருவிகள் நமக்குத் துணைநிற்கின்றன.

பொருளமைதி, உரை, இடப்பொருத்தம், நடை ஆகிய கருவிகள் அகச்சான்றுகளாக முதல்துணையாகின்றன.

பிறநூல் கருத்துகள், மேற்கோள் ஆகிய கருவிகள் புறச்சான்று களாக இரண்டாம் நிலைத்துணையாகின்றன.

யாப்பு அமைதி, பிற இலக்கண அமைதி ஆகிய கருவிகள் ஆய்வு நிலைத்துணைகளாக அமைகின்றன.

இம் மூன்று கருவிகளாகிய துணைகளோடு எழுத்து, சொல் முதலான வேறுபாடுகளிலிருந்து மூலபாடத்தை நிறுவும் முறை

களைச் சில சான்றுகளுடன் நிறுவலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/180&oldid=1571259" இலிருந்து மீள்விக்கப்பட்டது