உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

சுவடி இயல்

தந்தைக்குப்பின் மகன் பட்டம் பெற்று நாடாளுதல் என்பது தமிழ் மன்னர் முறைமையாக மு இருந்துள்ளது. அவ்வாறு முடிசூடும் முறைமை உரிமையினால் வருவதேயாகும். எனவே பாட வேறு பாடுகளாகக் காணப்படும் உரிமையில், முறைமையில் என்னும் இரண்டு தொடர்களும் பொருத்த முடையனவே. ஆயினும் இங்கு எடுத்துக்காட்டப்படும் வரிகள் முதலாம் குலோத்துங்கனின் மெய்க் கீர்த்தியடிகளாகும். அவன் அரசமுறைப்படி சோழநாட்டின் மன்னனாக முடிசூடும் உரிமை பெற்றவன் அல்லன். அதிராசேந்திர னுக்குப் பிறகு சோழர் குடியில் ஆண்மக்கள் இல்லாத காரணத்தால் தாய்வழி உரிமை பாராட்டிச் சோழநாட்டின் மணிமுடியை ஏற்றான் என்பது வரலாறு. எனவே முறைமையில் என்பதைக் காட்டிலும் உரிமையில் சூடினான் என்பதே பொருத்தமுடைய பாடம். இதனை உறுதிப்படுத்த,

"உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி’80

என்னும் பிறிதொரு மெய்க்கீர்த்தியடியும் துணையாகிறது. பொருளமைதி - புறச்சான்றுடன்

களகம்

-

கழகம்

"அங்களகச் சுதைமாடக் கூடல்'’81

x 6

வேறு : 'அங்கழகச் சுதைமாடக் கூடல்

சொல்லாலும் பொருளாலும் வேறுபடுகின்ற களகம், கழகம் என்னும் சொற்களுள் பொருளமைதியைப் பிறநூல் சான்றோடு காட்டிச் சரியான மூல பாடத்தை நிறுவுகிறார் பதிப்பாசிரியர்.

"...அழகிய தமிழ்ச் சங்கத்தையுடைய, சுண்ணாம்புச் சாந்தால் கட்டப்பட்ட மாடத்தையுடைய கூடல் என்று இத் தொடருக்குப் பொருள் செய்கின்றனர். கழகம் சங்கத்தைக் குறிப்பதாகக் கொள்கின்றனர்.

.

'கவறும் கழகமும் கையும் தருக்கி' 'கழகத்துக் காலை புகின்'

முதலிய இடங்களில் கழகம் என்பது கிறிக்கவே பயன்படுத்தப் பட்டுள்ளது.

-குறள் - 935.

குறள் - 937.

சூதாடும் இடத்தைக்

கழகம் என்பது சங்கத்தைக் குறிப்பிடப் பிற்காலத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லாகும். இராமாயணத்தில்,

30.

மெய்க்கீர்த்திகள், பக். 100.

31. தேவாரம், பா. 66.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/182&oldid=1571261" இலிருந்து மீள்விக்கப்பட்டது