உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலபாட ஆய்வு

'கந்தனை அனையவர் கலைதெரி கழகம்' - 79

167

எனச் சிறுவர்கள் தாம் கற்றவற்றை ஆராயும் இடமாகவே அது குறிப்பிடப்பட்டுள்ளது.

ம்

எனப்

'கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணத்தில் கழகம் என்றசொல் சங்கத்தைக் குறிப்பிடுவதாகக் காண்கிறோம். எனவே மூவருக்கும்

பிற்பட்ட காலத்திலேயே கழகம் சங்கத்தைக் குறிப்பிடப்பயன்படும் சொல்லாயது தேற்றம்.

களகம் என்பது சுண்ணாம்பை உணர்த்துதல், 'பண்களகத் தோதாப் பரந்தெழுந்து மாளிகைமேல் வெண்களகத் தாலே விரிந்து' (வீர. பக். 211)

என்ற வீரசோழியப் பாடலால் புலனாகும்.

அங்களகச் சுதை மாடக்கூடல் என்ற பாடம் சுவடிகளில் உள்ளது. 'அழகிய சுண்ணாம்புச் சாந்தால் கட்டப்பட்ட மாடங்களை உடைய கூடல் என நேராகப் பொருள்படும்' என்பது பதிப்பாசிரியரின் விளக்கம். *

தோழம் - தோழன்

"ஓத உலவா ஒருதோழம் தொண்டர் உளன் வேறு : “ஓத உலவா ஒருதோழன் தொண்டர் உளன்”

புகழ்ச்சி

தோழன் என்றே என்றே இதுவரை அச்சிடப்பட்டுள்ளது. முற்றுப்பெறாத ஒப்பற்ற உயிர்த்துணைவன், அடியார் உள்ளத் தினன் என்று உரை எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஏடுகளில் ஒரு தோழம் தொண்டர் உளன் என்றே காணப்படுகிறது. தோழம் என்ற சொல் ஒரு பேரெண்ணைக் குறிக்கும்.

1

உண்ணற் கரிய நஞ்சையுண் டொருதோழந் தேவர்

விண்ணிற் பொலிய அமுதளித்த விடைசேர்கொடி யண்ணல் என்பது சம்பந்தர் தேவாரம் (304).

ஒரு தோழம் காலம்' என்பது பரிபாடல்.

இங்குப் பொருளாவது, இறைவன்...எண்ணிறந்த தொண்டர்களை உடையவன் என்பது. எனவே தோழம் என்ற சொல்லே திருத்த மான பாடம் என்பது தெளிவாகின்றது.

32.

33.

34.

34

தேவாரம், முன்னுரை, பக். 128-129 தெருவம்பாவை, பா. 10

.

திருவாசகக்குறிப்புகள், பக், 158-159.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/183&oldid=1571262" இலிருந்து மீள்விக்கப்பட்டது