உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

வல்லாட்டை

வல்லரட்டை

“கடக்கும் திறல்ஐவர் கண்டகர்தம் வல்லாட்டை

சுவடி இயல்

986

அடக்கும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே” வேறு : "கடக்கும் திறல்ஐவர் கண்டகர்தம் வல்லரட்டை...' ஐம்புலன்களின் வலிய ஆட்டத்தை அடக்கும் ஆண்டான் என்பது பொருத்தமான பாடம். ஆயினும் வல்லரட்டை என்று கொண்டு ஐம்புலன்களின் வலிய குறும்புகளை, சேட்டைகளை அடக்கும் ஆண்டான் எனக்கொள்ளுவது சிறப்புடையது.

(அப்பர் தே-5294)

"அரட்டர் ஐவரை ஆசறுத் திட்டுநீர்” என்பது அப்பர் வாக்கு. ஏடுகளில் 'வலலாட்டை' என்று காணப் படும் தொடர் வல்லாட்டை என்று படிக்கப்பட்டதால் ஏற்பட்ட குறை இது. அதே தொடரை வல்லரட்டை என்றும் படிக்கலாம். எனவே வல்லரட்டை என்பதே சிறப்பான பாடம்.36

உருமானாய் - உருவானாய்

வேறு:

"மின் ஆனாய் உரும் ஆனாய்8"

“மின் ஆனாய் உருவானாய்

அல்லது

இறைவனே! நீ மின்னலாக, நல்ல நிறத்தை வடிவத்தை) உடையவனாக உள்ளாய் என்னும் இப்பொருளில் சிறப்போ, பொருள் தொடர்போ இல்லை. 'கருவி தொகுதி என்னும் நூற்பாவின் (தொல். சொல் -354) உரையில் 'கருவி வானம் கதழ் உறை சிதறி' (அகம்-4) என்று காட்டி, கருவி - இடி, மின்னல் முதலியவற்றது தொகுதி என்றார் நச்சினார்க்கினியர். மின்னலொடு தொடர்புடைய இடியினைக் குறிக்கும் உரும் என்பதே சிறப்புடைய பாடம் எனத்தேர்ந்தெடுத்தார்.88

சிற்றடக்கம் - சிற்றட்டகம் - சிற்றெட்டகம்

எனவே

சிற்றடக்கம், சிற்றட்டகம் எனப் பலவாறாக வழங்கப்பட்ட நூலின் பெயர் களவியற் காரிகையுரையால் பொருள் பொருத்தத் துடன் சிற்றெட்டகம் என்று தெளிவு பெற்றது.

"மதுரைத் தமிழ்ச் சங்கத்தினின்றும் வெளியிட்டுள்ள நம்பியகப்பொருள் விளக்கவுரையில் (அகத்திணையியல்,

35.

சென்னிப்பத்து, பா.8.

.

36. திருவாசகக் குறிப்புககள், பக். 160-161.

37. தேவாரம், பா. 4300.

38. தேவாரம், முன்னுரை, பக். 135.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/184&oldid=1571264" இலிருந்து மீள்விக்கப்பட்டது