உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலபாட ஆய்வு

169

சூத்திரம் -6) 'பத்துப்பாட்டும் கலித்தொகையும்... சிற்றட்டகமு முதலாகிய சான்றோர் செய்யுட்களெல்லாம் எனக் காணப்படு கிறது. இதன் அடிக்குறிப்பில் சிற்றடக்கம் என்பது பிரதி பேதமாகக் காட்டப்பட்டுள்ளது. களவியற்காரிகையுரை சிற்றெட்டகம் எனவே நூற்பெயரை யாண்டும் வழங்குகிறது... ஐந்திணைகளுள் ஒவ்வொரு திணைக்கும் எட்டுச்செய்யுட் களாக நாற்பது செய்யுட்கள் கொண்ட சிறியதொருநூல்' என்று இதனைக் கோடல்தகும். BP

பிறநூல் சான்றுகளோடு ஒப்பிட்டு, ஏடுகளில் உள்ள பல பாடல் களில் திருத்தமானதும் பொருட்பொருத்தமுடையதுமாகிய பாடத்தைத் தேர்ந்தெடுக்கும் முறைகளை இச்சான்றுகள் விளக்கு

கின்றன.

பொருளமைதி -பொது - (ஆய்ந்தறிதல்)

g

தறிசெறுகளிறு - தறிசெறிகளிறு

"தறிசெறு களிறும் அஞ்சேன்4°

வேறு: "தறிசெறி களிறும் அஞ்சேன்"

கட்டுத்தறியில் செறிக்கப்பட்ட (கட்டப்பட்ட) களிறு அஞ்சேன்

என்பது சிறப்பில்லை. கட்டுத்தறியை

முறித்துக் கொண்டு (செறுத்து - முறித்து) ஓடிவரும் களிற்றுக்கும் அஞ்சேன் என்பதே பொருட் சிறப்புடைய பாடம்.

செயற்கரிய - செயற்குரிய

'செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்2

க்குறட்பாவிற்கு, செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரிய வற்றைச் செய்வார்; பெரியவர், அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர்” என்று உரை கூறுவார் பரிமேலழகர்.

"ஒருவராலும் செயற்கரிய துறவறத்தைச் செய்வார் பெரியர்; சிறியர் செய்யும் தொழிலாகிய இல்லறமும் செய்ய அறியார்” என்பது பரிதியார் உரை. "அவரது (பரிதியாரது) உரையின்படி

39.

களவியற்காரிகை, பக். 164-165,

40. திருவாசகம், அச்சப்பத்து. பா.8.

41. திருவாசகக் குறிப்புகள், பக். 157-158. 42. குறள், 26.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/185&oldid=1571265" இலிருந்து மீள்விக்கப்பட்டது