உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

சுவடி இயல்

அவர்கொண்ட மூலபாடம் 'செயற்கெளிய செய்கலாதார்' என்றே இருத்தல் வேண்டும்" என ஊகிக்கிறார் அ. விநாயகமூர்த்தி அவர்கள் 48

ஆயின், செயற் குஅரிய... செய்வார் செய்வார் பெரியர்; செய்யுந் தொழி லாகிய இல்லறமும் செய்ய அறியார் சிறியர் என்னும் பரிதியார் உரை பரிமேலழகர் உரையினும் முற்பட்டது. அரிய செய்வார் பெரியர்; செய்தற்கு உரியதாகிய இல்லறமும் செய்யார் சிறியர் என்னும் பரிதியார் உரையை நோக்க அரிய செய்வார் - உரியவும் செய்யார் என்னும் பொருள்கள் தெளிவாகின்றன. மேலும் சுவடிகளில் க, ஆகிய எழுத்துக்களில் பெரும் வேறுபாடு இன்றிக் காணப்படுவதும் உண்டு. எனவே ஏடுபடித்தோர் 'கு' என்ற எழுத்தையும் அடித்தொடர் நோக்கிக் 'க' என்றே

கொண்டால்,

-

படித்து விட்டனர்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்குரிய செய்கலா தார்"

என்று கொள்ளுவது மேலும் பொருத்தமுடையதாகிறது.

பாடல்களை யடுத்துக்

கு

முன்

என்று

ச்

காணப்பெறும் உரையின் துணை கொண்டு உரிய பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை சான்றுகள் விளக்குகின்றன.

அை மை

ஒரு சொல்லுக்கு அல்லது தொடருக்கு ஏற்ற பல பாட ங்கள் கிடைக்கின்றபோது அந்த க்கின்றபோது அந்த இடத்திற்குப் பொருத்த முடைய பாடமாக நூலாசிரியர் எந்தப் பாடத்தைக் கொண்டிருப் பார் என்று தேர்ந்தெடுப்பதை மூன்றாம் நிலையாகக் கொள்ள லாம். பாடமாகக் கிடைக்கும் சொற்கள் பொருளுடையனவாக இருக்கலாம். ஆனால் பாடற்பொருள் நிகழும் இடத்திற்கு, முன்பின் அமைந்த தொடர்களுக்கு அல்லது பாடல் அடிகளுக்கு ஏற்ப அவ்விடத்திற்குப் பொருத்த முடையதைக் காண்பதே இட அமைதியால் மூலபாடம் தேர்ந்தெடுத்தல் ஆகிறது. இம்முறை யினைச் சில சான்றுகளால் விளக்கலாம்.

கடலே -சுழலே

!

43.

44.

'செம்பொருட் துணிவே! சீருடைக் கடலே! செல்வமே சிவபெரு மானே!*

ஐவர் அம்மானை, பக். 61.

திருவாசகம், பிடித்தபத்து, பா. 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/186&oldid=1571266" இலிருந்து மீள்விக்கப்பட்டது