உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலபாட ஆய்வு

வேறு : "சீறுடைக் கழலே"

171

கடலே, கழலே என்பன கிடைத்துள்ள பாடங்கள். கழலே என்பது அச்சு நூல்களில் காணப்படுவது. கடலே என்பது சில சுவடிகளில் காணப்படும் பாடம்.

உம்பர்கட்கு அரசே! யோகமே, மருந்தே, துணிவே, செல்வமே, சிவபெருமானே! என்பன இப்பாடலில் அமைந்துள்ள பிற விளித் தொடர்கள். அவ்வரிசையில் கழலே! என்ற விளியும் அமைகிறது. அரசே! மருந்தே! என்னும் தொடர்களால் இறைவனை விளிப்பது மரபு. கழலே! என்பது நேரே இவ்விடத்திற்குப் பொருந்தாத தாகிறது. விளிப்பதும் மரபு அன்று. மாணிக்கவாசகர் பல இடங் களில் கடலே! என்று விளிக்கிறார். *கருணைமாக்கடலே!' என்பது பிடித்தபத்தின் இரண்டாம்பாடல். எனவே பிற சுவடிகளில் கிடைப் பதும் இவ்விடம் விளிக்குப் பொருந்துவதுமாகிய கடலே என்பதையே பாடமாகக் கொள்ளலாம். 45

ஆறாறுக்கு -- யாவைக்கும்

வேறு :

அஞ்செழுத்தே

ஆனந்தத் தாண்டவமும் ஆறாறுக் கப்பாலாம்’46

ஆனந்தத் தாண்டவமும் யாவைக்கும் அப்பாலாம்”

ஆறாறு தத்துவமேது? என்பது முதலான வினாக்களுக்கு விடைகூறும் உபதேசமாக அமைந்தது உண்மை விளக்கம் என்னும் நூல், 'ஆறாறு தத்துவமும் சொன்னோம்'; 'ஆறாறு தத்துவமும்... வகுத்துரைத்தீர்’ என்னும் தொடர்களையுடையன பாடல்கள், மேலும்

"யாவைக்கும் என்ற மூலம் தத்துவாதீதம் என்ற பொருளுக்கு ஏற்ற மூலமன்று. ஆறாறுக்கப்பாலாம் என்ற பாடம் பல ஏடு களில் காணப்படுகிறது. இது முப்பத்தாறு தத்துவங்களுக்கு அதீதமாகிய என்ற பொருள்தரவல்லது. எனவே, மூலம்...

ஆறாறுக்கப்பாலாம்' என்றிருக்க வேண்டும்"*7

என்ற விளக்கமும் இங்கு ஏற்புடையதாகிறது. எனவே யாவைக்கும் என்பது பொருள் பொருத்தமுடையதாய், அச்சு நூல்களில் காணப் பட்டாலும் வினாவிடைகளின் கருத்துகளை நோக்கும்போது

45. திருவாசகக் குறிப்புக்கள், பக். 128-131, 46. உண்மை விளக்கம், பா. 44.(எ-டு. திருவாசகக் குறிப்புக்கள்) பக். 166.

47. திருவாசகக் குறிப்புக்கள், பக், 166.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/187&oldid=1571267" இலிருந்து மீள்விக்கப்பட்டது