உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

சுவடி இயல் இவ்விடத்தில் ஆறாறுக்கப்பாலாம் என்பதே திருந்திய பாடமாக ஏற்க முடிகிறது.

ஒத்துக்

நடை : ஒவ்வொரு நூலாசிரியரும் ஒவ்வொரு வகை நடை யினைக் கையாளுவர். நூலுட் காணப்படும் அவ்வாசிரியரின் சொல்லாட்சி, தொடரமைப்பு, விளித்துக் கூறும் கூறும் நடை, யாப்பு நடை ஆகிய நடை யமைப்புகள் பெரும்பான்மையாக காணப்படும். சில தொடர்கள் அடுக்கு முறையில் எண்ணலங்காரம், சொல்லலங்காரம் பெற்று அமைவதும் காணப்படும். இவ்வாறான ஆசிரியரின் நடையை நுண்ணிதின் அறிந்து, பாடவேறுபாடுகளும் ஐயங்களும் நிகழுமிடத்து ஆசிரியரின் நடையமைப்பின்

கொண்டு உண்மையான

நான்காவது

துணை

மூலபாடத்தைத் தேர்ந்தெடுப்பதை நிலையாகக் கொள்ளலாம். அவ்வாறு நடையின் துணையால் தேர்ந்தெடுத்துள்ள பாடங்களுக்குச் சில சான்று களைக் காட்டி விளக்கலாம்.

வகுத்தான்-வகுத்தார்

"வகுத்தான் வகுத்த வகையல்லால்" (குறள்-377)

வேறு : "வகுத்தார் வகுத்த வகையல்லால்

வாலறிவன் (2)

வேண்டுதல் வேண்டாமையிலான் (4) ஐந்தவித்தான் (6)

ஆதிபகவன் (1)

மலர்மிசை ஏகினான் (3)

இறைவன் (5)

உவமை இல்லாதான் (7)

அறவாழி அந்தணன் (8)

எண்குணத்தான் (9)

பற்றற்றான் (350)

நடையால்

தாமரைக் கண்ணான்-(1103) என்பன வள்ளுவர் இறைவனைக் குறிப்பிடும் சொற்கள். இவை அனைத்தும் ஒருமை அமைந்தவை. இறைவனைக் குறிப்பிடும் வள்ளுவர் என்பதை உணர்ந்த பரிமேலழகர்,

நடையிது

உடைய

வகுத்தார், வகுத்தான் என்ற வேறுபாடுகளை குறட்பா சொற்களில் "வகுத்தான்' என்ற சொல்லையே தேர்ந் தெடுத்தார் (குறள். 377). காளிங்கர் முதலான சில உரை யாசிரியர்கள் வகுத்தார் என்றே கொண்டுள்ளனர். மேலும் ஒருவற்குச் சொல்லுமாற்றால் உலகுக்கு அறிவிக்கும் நடையே வள்ளுவர் நடை என்று முடிவு செய்த பரிமேலழகர், தமக்கு முற்பட்ட உரையாசிரியர்களாகிய மணக்குடவர், காளிங்கர் ஆகியோர் கொண்ட பாடத்தினின்றும் வேறுபட்டுப் பெரும் பாலான உயர்திணை, அஃறிணைச் சொற்களில் ஒருமை நடையையே தேர்ந்தெடுத்து உரை கூறியுள்ளார். அவ்வாறு அவர்கள் கொண்ட பாடங்களுள் சில :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/188&oldid=1571268" இலிருந்து மீள்விக்கப்பட்டது