உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

193

த.ந.சுப்பிரமணியன், 9 ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ்மொழியில் வடமொழியின் தாக்கம் மிகுதியாகிவிட்டது. அதனால் கிரந்த எழுத்துகள் தமிழ்மொழியில் கலக்கத் தொடங்கின. புள்ளியிட்டு எழுதும் வடிவம் கிரந்த எழுத்து

களுக்குக் கிடையாது. கிரந்தம் தெரிந்தவர்கள் தமிழ்ச் சுவடிகளை எழுதும்பொழுது சிறிது சிறிதாகச் சில கிரந்த எழுத்துகளையும், புள்ளியின்றி எழுதும் கிரந்த எழுத்து முறைகளையும் சுவடிகளில் புகுத்தி விட்டனர் என்பது எஸ். சௌந்தர பாண்டியனின் கருத் தாகும்.10

இவற்றிலிருந்து. சுவடியில் ஓட்டை விழும் என்பதனால் புள்ளி யின்றி எழுதினார்கள் என்னும் கருத்து பொருத்தமுடையதாகத் தெரியவில்லை; கிரந்த எழுத்துகளின் தாக்கத்தினால் இம்முறை ஏற்பட்டதாகலாம் என்று அறிய முடிகிறது. சொற்களை இடம், பொருள் உணர்ந்து புள்ளிகளைச் சேர்த்துப் பதிப்பிப்பது பதிப்பாசிரியர் கடமையாகும்.

பெரிய இரதத்தை நடாத்தித் திரிகின்ற கருணைக் கடல்’11 என்ற தொடரில் ‘திரிகின்ற’ என்ற சொல் சுவடியில் திரிகின்ற என்று காணப்படுகிறது. படியெடுத்தவர் 'கி' என்ற எழுத்தைக் க' என்னும் உயிர்மெய்யாகக் கொண்டு புள்ளியை அடுத்த எழுத் திற்கு மாற்றி வைத்து-திரிகனற் கருணைக் கடல் என்று எழுதினார். பொருள் பொருத்தமில்லாமற் போயிற்று.

பிற்காலச் சுவடிகள் சிலவற்றில் புள்ளியின்றி சிறு கோடிட்டுக் காட்டப் பெற்றுள்ளது. ஆனால் அச்சிறு கோடு புள்ளி வைத்துப் படிக்கக் கூடாது என்பதைச் சுட்டுவதாக அமைந்துள்ளது

குறிப்பிடத்தக்கது.

தாவிக கனங்க ளருத்து முன் னாண்டரு ளஞ்ச லென்ற

'பலலுயிரதள புகழ்ந்துவர 15

ள, ர

11 2

என்பனவற்றுள் ள ர இவற்றின்மீது புள்ளி வைத்தும் படிக்கலாம். ஆனால் இங்கு புள்ளி வைக்க வேண்டாம் என்பதற்காக, மேலே கூறியபடி சிறு கோடு இடப்பெற்றுள்ளது. இதே அடிப்படையில்,

9.

10.

11.

தென்னிந்திய கோயிற் சாசனங்கள், 3-2, பக். 1532. Tamil Civilization, p. 90,

அரங்கன் சரிதம், 617 உரை.

12. மருதூ ரந்தாதி, டி. 263. 13. நசரைக் கலம்பகம், டி. 298. சுவ.-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/209&oldid=1571293" இலிருந்து மீள்விக்கப்பட்டது