உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

'பயத் தொடும் வரவிடும் ஒற்றரை'-

என்ற பொருள்படுந் தொடர்

6

பயத்தொடு மவர்விடும் ஒற்றரை'

என்றே அச்சாகி உள்ள நிலையையும் காண முடிகிறது.

சுவடி இயல்

14

மெய்

ஏகார, ஓகார உயிர்மெய்கள்: சுவடிகளில் எகர, ஏகார உயிர்மெய்களும், ஒகர, ஓகார உயிர்மெய்களும் ஒற்றைச் சுழிக் கொம்புடனே எழுதப் பெற்றுள்ளன. எகர ஒகரங்கள் போலப் புள்ளிபெறும் இயல்பிற்று. எனவே ஏகார ஓகாரங் களுக்குப் புள்ளி இல்லை யாயிற்று. இஃது உயிர்மெய்க்கும் ஒக்கும்" என்பது நச்சினார்க்கினியர் கூற்று. இதனால் எகர ஒகர உயிர்மெய்கள் புள்ளியிட்டும், ஏகார ஓகார உயிர்மெய்கள் புள்ளி யின்றியும் ஒற்றைச் சுழிக் கொம்புடன் எழுதப்பெற்றன என்பது தெளிவாகிறது. புள்ளி வைக்கும் வழக்காறு மறைந்த காலத்தில் அக் குறில் நெடிகளில் வேறுபாடு அறிய இயலாத நிலை ஏற்பட்டு விட்டது. இக் குறில் நெடில்களைப் பாடல்களில் ஓசை நயத்தா லும், சீர்தளை சிதைவுறாத் தன்மையாலும் அறிந்து ஓழுங்குபடுத் தலாம். உரைநடையாயின் பொருள் அமைப்பிற்கேற்ப ஒழுங்கு

படுத்த வேண்டும்.

"சேரன் மடவன்னம் சேர னடையொவ்வாய்'1

என்னும் சிலப்பதிகார அடி, உ.வே.சா.வின் முதற் பதிப்பில் (1894), சொன் மடவன்னம் சொன்னடையொவ்வாய்" என்று அச்சிடப் பெற்றது. மறு பதிப்புகளிலும், பிற உரையுடன் கூடிய பதிப்புகளிலும் 'சேரன்' எனத் திருத்தம் பெற்றது. கொம்பினால் குறில் நெடில் அறிய இயலாத நிலையும், காலும் ரகரமும் மயங்கிய நிலையும் இப்பிழை தோன்றியதற்குக் காரணங்களாயின. நயத்தால் திருத்தம் பெற்றது; பொருள் பொருத்தமும் இணைந்தது.

தொல்காப்பியம்,

சொல்லதிகார நூற்பா

ஓசை

அறுபத்தாறில் வியங்கொள வருதல்' என்று கு.சுந்தரமூர்த்தி பதிப்பித்துள்ள தொடர், சி.வை.தாமோதரம் பிள்ளை பதிப்பில் 'வியங்கோள் வருதல்' என்று காணப்படுகிறது. புள்ளியின்மையும் ஒற்றைச்

14.

மெய்க்கீர்த்திகள், பக். 43.

15. தொல். எழுத்து, 16.

16.

சிலப்பதிகாரம், 7:23.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/210&oldid=1571294" இலிருந்து மீள்விக்கப்பட்டது