உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

195

சுழிக் கொம்பின் அமைப்பும் இவ்வேறுபாடுகளைத் தோற்றுவித் துள்ளன.

"படியானையெ பிணிப்புண்பன

செ லொடையே கலக்குண்பன

> 17

சலொடையே என

என்பன அச்சில் காணப்படும் அடிகள். இவற்றுள், யானையே, செலோடையே என்பன யானையெ, அச்சிடப்பட்டன. இவை எகர ஒகரக் கொம்புகளால் நிகழ்ந்துள்ள பிழைகளாகும்.

சோணா டெங்கும் சோற்றுமலை கண்டருளி' என்னும் தொடர் பொருள் பொருத்தமின்றி, ஓசை நயமின்றி, ‘சேர நாடெங்குஞ் சொற்றுமலை கண்டருளி' என்று பதிக்கப் பெற் றுள்ளது. இவை சுவடி இயல் பயிற்சிக்குச் சிறந்த அனுபவம் ஊட்டுவனவாகும். எழுத்து அட்டவணையில் காணும் பிற எழுத்து முறைகளையும் கூட்டெழுத்துகளையும் அறிவதால் மேலும் சுவடிப் படிப்பை எளிதாக்கிக் கொள்ளலாம்.

கையெழுத்துத் தெளிவின்மை : எழுதுவோரின் பழக்கத்திற் கேற்பச் சில எழுத்துகள் ஐயம் தருவனவாக இருக்கும். இந்த முறை இக்காலத்திலும் சிலரிடையே காணப்படுவதை அறியலாம். ஐயம் தரும் எழுத்துகளின் பட்டியலும் கீழே தரப்படுகிறது. கையெழுத்துத் தெளிவின்மையால் ஏற்படும் ஐயங்களை யூகத் தாலும், இடம், பொருள் பொருத்தங்களாலும் நீக்கிக் கொள்ள லாம். மேலும், ஒரு சுவடியில் ஒரு சில ஏடுகளைப் பொறுமை யாகப் படிப்பதாலும் ஐயத்தைப் போக்கிக் கொள்ள முடியும். ஐயம் ஏற்படும் ஓர் எழுத்து மேலும் சில இடங்களில் அவ்வாறே இருக்கும். அங்கு உள்ள சொல்லின் பொருத்தத்தால் அவ்வெழுத்தைப் புரிந்து கொள்ளலாம். சுவடி முழுமையும் எழுதி முடித்தபின் அச்சுவடியின் கையெழுத்து முறையை நன்கு புரிந்து கொள்ளலாம். எனவே மீண்டும் ஒருமுறை அச்சுவடியையும் எழுதிய படியையும் வைத்துக்கொண்டு ஒப்பிட்டுப் பார்ப்பதனால் பல எழுத்துகள் தூயவடிவம் பெறும்.

17.

தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி-17, எண்.592.

.

18. மேற்படி, தொகுதி-3, கல்வெட்டுகள், எண்.180.

GT GODT. 85;

புதுக்கோட்டைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/211&oldid=1571295" இலிருந்து மீள்விக்கப்பட்டது