உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

சுவடி இயல் வந்தவாறே பிற மூன்றடிகளிலும் பொருந்தி வருதல் வேண்டும் இதுவே சீர் அளவு ஒத்து வருதல் என்பதாகும்.

விருத்தவகை : பாடற் பொருளின் வன்மை, மென்மைகளுக் கேற்ற நடையை அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது விருத்தப்பா வடிவமாகும். இவ்வடிவம் பயிற்சிக்கும் எளிமையுடையதாகும். அறுசீர் விருத்தம், எழுசீர், எண்சீர் விருத்தங்கள் ஆகியவை ஆசிரிய விருத்த வகைகளில் சிறப்புடையன. கலிவிருத்தம், கலித்துறை. கலிவெண்பா ஆகியவையும் பயின்றுவருவன. இவற்றுள், விருத்தப் பாக்கள் நான்கு அடிகளை உடையவை.

சீர்களாலான அடிகள் எனப்படும். ஆயினும் கீழே காட்டப்பெறும்

அறுசீர் ஆசிரிய விருத்தம் : : ஆறு நான்கு கொண்டது அறுசீர் விருத்தம் சீரளவினால் பலதிறப்படும். அவற்றுள் ஏழுவகை விருத்தங்கள் பயின்று வருவனவாகும். பயிற்சி பெறுவது பயனுடையதாகும். இப்பயிற்சி துணையாகும்.

வகை-1 (விளம் மா மா விளம் மா மா)

66

அவற்றுள் நல்ல

பிறவகைகளை

அறிய

‘ஆடகச் செம்பொன் கிண்ணத் தேந்திய அலங்கல் தெண்ணீர் கூடகங் கொண்ட வாழ்நாள் உலர்ந்ததேற் கொல்லும் பவ்வத் தூடகம் புக்கு முந்நீர் அழுந்தினும் உய்வர் நல்லார்

பாடகம் போலச் சூழ்ந்த பழவினைப் பயத்தி னென்றான்

L

26

இவ்வறுசீர் விருத்தத்தில் முதலடியின் முதற்சீரும் நான்காம் சீரும் விளச்சீர்கள். பிற நான்கும் மாச்சீர்கள். இதே சீர் அளவுகள் அடுத்த மூன்று அடிகளிலும் ஒத்து நிற்கின்றன. மாறினால் ஓசை கெடும். ஓர் அடியின் இவ்வமைப்பை வரையறை செய்துகொண்டு ஓசையைப் புரிந்துகொண்டால் பிற அடிகளை இதே அமைப்பில் எழுதுவது எளிமையாகிவிடும். தொடர்நிலைச் செய்யுட்களில், தொடர்ந்து பல பாடல்கள் ஒரே வகையில் அமையும். சுவை வேறுபடும்போது இவ்வமைப்பு மாறுபடுவதுண்டு. மாறுபடுமிடத் திலும் ஓர் அடியின் அமைப்பை இவ்வாறே வரையறுக்க வேண்டி வரும்.

சுவடிகளிலிருந்து தனித்தனி அடிகளைப் பிரித்தெழுதப் பயன் படுவது தொடையமைப்பாகும். இப்பாடலில் அடியெதுகை 26. சீவகசிந்தாமணி, 510.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/216&oldid=1571300" இலிருந்து மீள்விக்கப்பட்டது