உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

-

-

201

அமைகிறது. இது எல்லா விருத்தங்களுக்கும் உரியது. இரண்டிரண்டு அடிகளுக்கு ஒருவகை எதுகையாக - இருவிகற்பமாக - அமையவும் கூடும், ஒவ்வொரு அடியிலும் காணப்பெறும் தொடை விகற்பங்கள் சீர்களைப் பிரித்தறிய ஏதுவாக இருக்கும். இப்பாடலில் அடி தோறும் முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனைத் தொடையால்

அமைவது, சீர்பிரித்து எழுதுவதற்குத் துணைபுரியும்.

வகை -2 (மா மா காய் மா மா காய்)

அங்கைத் தலத்துத் தனரேகை

யளவில் செல்வந் தருமுனது

செங்கைத் துடிதென் மதுரேசர்

செம்பொற் புயத்தில் சேர்க்குமால்...”27

இதில் அடியெதுகை அமைகிறது.

முதற் சீருக்கேற்ற மோனைத்

தொடை எல்லா அடிகளிலும் மூன்றாஞ் சீரில் அமைகிறது.

வகை-3 (வெண்டளைகளாக வரும் அறுசீர்கள்)

கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான் பாதம் இரண்டும் வினவின் பாதளம் ஏழினுக் கப்பால்...'28 இது முதலும் நாலுமாகிய சீர்கள் மோனையும், அடியெதுகையும்

உடையது.

இவ்விருத்தப் பாக்களைக் கையாண்டுள்ள நூலாசிரியருள் பலர், தாம் எடுத்துக்கொண்ட ஒருவகைப் பாவினையே நூல் முழுமையும் கையாளுகின்றனர். சோதிடம், தோத்திரம், நிகண்டு, மருத்துவம் முதலிய நூல்களில் தொடக்கத்தில் அமையும் வகை விருத்தப் பாக்களே நூல் முழுமையும் காணப்படுகின்றன. திருவருட்பாவில் காணப்பெறும் அறுசீர் விருத்தப் பாக்கள் பெரும்பாலும் ஒரே நடையின. சீவகசிந்தாமணி, கம்பராமாயணம். பெரியபுராணம், திருவிளையாடற்புராணம் ஆகியவை பொருளுக் கேற்பப் பலதிறப்பட்ட விருத்தப் பாக்களை மேற்கொள்ளுகின்றன. இவ்வமைப்புகள் சுவடிகளில் சேர்ந்து காணப்படும் அடிகளையும் சீர்களையும் பிரித்தறியப் பயன்படுவனவாகும்.

எழுசீர் ஆசிரிய விருத்தம் :

இரண்டாம் சீர், நான்காம் சீர், ஏழாம் சீர் ஆகிய மூன்றும் மாச்சீர்களாகவும், பிற நான்கும் விளச்

27. மீனாட்சியம்மை குறம் - 30.

28. திருவாசகம், குயிற்பத்து, 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/217&oldid=1571301" இலிருந்து மீள்விக்கப்பட்டது