உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

சுவடி இயல் சீர்களாகவும் வரும் ஒருவகையினையே எழுசீர் விருத்தமெனவும், பிறவற்றை எழுசீர் சந்த விருத்தம் எனவும் கொள்வர் டி.வீரபத்திர முதலியார். 29 ஆயினும், சீர் அளவு ஒத்து வரும் எழுசீர் விருத்தங்கள் பலவகை காணப்படுகின்றன. அவற்றில் அமையும் அடியெதுகை முறையும், அடிதோறும் பொருந்தி வரும் மோனையும் சுவடியிலிருந்து பிரித்து எழுதுவதற்குப் பயன்படுவன வாகும்.

வகை-1 (விளம் மா விளம் மா விளம் விளம் மா)

'கண்ணுதல் மதுரைப் பிரானையிவ் வாறு கருதிய பாணியாற் கனிந்து

டனைமுதல்

பண்ணுதல் பரிவட் டனை முதல் இசைநூல்

பகர்முதற் றொழிலிரு நான்கும்...

1980

அடிதோறும் முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனைப் பொருத்தம் உடையது. எழுசீர் விருத்தங்கள் இம்முறையிலேயே அமைகின்றன.

வகை-2(மா மாமா மா மா மா காய்)

காரார் குழலாள் உமையோ டயில்வேற் காளை யொடுந்தான் அமர்கின்ற

ஏரார் கோலங் கண்டு களிப்பான்

எண்ணும் எமக்கொன் றருளானேல்...’31

வகை - 3 (சாய் காய் காய் காய் காய் மா மா) “ஆறுதலை வைத்தமுடி நீணிலவெ றிப்பவெமை ஆளுடைய பச்சை மயிலோ

டீறுமுதல் அற்றமது ராபுரியி லுற்றபர மேசரொடு சற்று முணரார்...93 2

எழுசீர் விருத்தங்களுக்கான இவ்வகைகளில் சீர் அளவு ஒத்து வரும் ஓசை நயம் அறிந்து பயிற்சி பெற்றால் சுவடிகளிலிருந்து எடுத்து எழுதுவது எளிமையாகிவிடும்.

எண்சீர் சிரிய விருத்தம்: மேற்கூறிய மேற்கூறிய இருவகை விருத்தங் களைப் போன்று சீர் அளவால் பல வகைகளை உடையது இவ்

29.

30.

விருத்தப்பாவியல், பக்.14.

திருவிளையாடற்புராணம், இசைவாது வென்றது-37. 31. திருவருட்பா, 2 : 24 :1. 32. மதுரைக் கலம்பகம், 20.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/218&oldid=1571302" இலிருந்து மீள்விக்கப்பட்டது