உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

203

பெறும்

விருத்தம். பெரும்பாலும் முதல் நான்கு சீர்கள் அளவினையே அடுத்த நான்கு சீர்களும் பெற்று வரும்; அடிதோறும் முதற்சீறும் ஐந்தாவது சீரும் மோனை பொருந்தி வரும். இவ் வகையிலும் சந்த விருத்தங்களைப் பிரித்துக் காட்டுவர். 85

வகை-1(காய் காய் காய் மா காய் காய் காய் மா )

"மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரும் நாண்

முழுதுலக மூடியெழில் முனைவயிரம் நாற்றித் தூவடிவி னாலிலங்கு வெண்குடையின் நீழல்

சுடரோய்நின் அடிபோற்றிச் சொல்லுவதொன்

றுண்டால்'

கலிவிருத்தம் : நான்கு சீர்களாலான அடிகள் நான்கு வரப் பாடுவது கலிவிருத்தமாகும். எத்தகு சீர்களும் அமையலாம். 'வெண்பாவின் நான்காமடி நான்கு சீராகப் பாடுவோமானால் அது கலிவிருத்த மன்றோ' என்பர் வீரபத்திர முதலியார்.8 5 ஆனால் பலவிடத்து வெண்தளை வழுவி வருவது கலிவிருத் தத்தின் இயல்பாகிறது. அளவடி நான்காயமைவது கலிவிருத்த மாகிறது. சீர் அளவு ஒத்து வருதலிலும் சிலவிடத்து மாற்றம் பெறுகிறது. சீர் அளவு ஒத்து வரும் கலிவிருத்தம்,சீர் அளவு ஒத்து வராத கலிவிருத்தம் என இரண்டு வகையிலும் அமைகிறது. அடி எதுகை கொண்டு அடியைப் பிரித்து அறியவும், பொழிப்பு சீர்களைப் பிரித்து அறியவும்

மோனை அமையும் தன்மையில் இயலும்.

வகை-1 (மா விளம் விளம் விளம்)

"உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே’’5*

வகை-2 (காய் மா மா காய்)

"வேகமுறு நெஞ்ச மெலிவு மெளியேன்றன் தேக மெலிவுந் தெரிந்து மிரங்காயேல்...87

33.

விருத்தப்பாவியல், பக். 64.

34. யாப்பருங்கலம், உறுப்பியல்,25 (எ-டு.)

35.

விருத்தப்பாவியல், பக். 19. 36. பாலகாண்டம், பாயிரம்.1.

37. திருவருட்பா, 2 : 74 : 1,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/219&oldid=1571303" இலிருந்து மீள்விக்கப்பட்டது