உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

சுவடி இயல் இவை கலிவிருத்த வகைகளுள் சில. இரண்டாவது வகை நான்கு சீர் என்ற அளவில் அடிதோறும் அமைந்தாலும் அளவொத்து அமைதல் இல்லை. பொழிப்பு மோனையுமில்லை. இவை பொருந்து மாற்றினை அறிந்து பிரித்து எழுதுவதற்குப் பாடலின் பலவகை களையும் அறிதல் பயன்தரும்.

கலித்துறை : நெடிலடி நான்காய் வருவது கலித்துறை. முதற் சீரோடு ஐந்தாம் சீர் மோனை ஒன்றிவரும். சீர் அளவு பொருந்தி வரும் அமைப்பினைக் கொண்டு கலித்துறைப் பாடலையும் வகைப் படுத்தலாம். இவ்வகைகளை அறிவதன்மூலம் சுவடிகளில் இணைந்து கிடைக்கும் அடிகளையும் சீர்களையும் எளிமையாகப் பிரித்து எழுத முடியும்.

வகை -1 (காய் விளம் மா காய் காய்)

"நான்செய்த புண்ணியம் யார்செய் தனரிந்த நானிலத்தே வான்செய்த தேவருங் காணாத காட்சி மகிழ்ந்து

கண்டேன் ’88 இவ்வாறான சீர் அளவு ஒத்து வரும் நெறிமுறைகளை நன்கு பயின்று பாடல்களைப் பதிப்பிக்கும் முறையை எளிமைப்படுத்திக் கொள்ளலாம்.

கட்டளைக் கலித்துறை : நெடிலடி நன்காய் வருவது; முதற் சீர் நான்கும் வெண்டளை பொருந்தி கடைச்சீர் கருவிளங்காய், கூவிளங்காய் ஆகிய இரண்டில் ஒன்றாகி வருவது கட்டளைக் கலித்துறை ஆகிறது. முதற்சீர் நேரசையில் நேரசையில் தொடங்குமாயின் ஒரடிக்குப் பதினாறு எழுத்தும், நிரையசையில் தொடங்குமாயின் பதினேழு எழுத்துமாக அமையும். ஏகாரத்தில் முடியும். வெண்டளை பொருந்த வரும். முதற்சீர்கள் நான்கும் பெரும்பாலும் ஈரசைச் சீர்களாக வரும். சிறுபான்மை தேமாங்காய், புளிமாங் காய்ச் சீர்கள் வருவதும் உண்டு. எவ்வாறாயினும் விளங்காய்ச்சீர் வருவதில்லை. ஈற்றுச்சீர் கனிச்சீராய் முடிவதும் சிறுபான்மை. ஒரு பாடலில் ஓரடியின் இறுதிச் சீரும் அடுத்த அடியின் முதற்சீரும் வெண்டளை பொருந்த வரவேண்டிய கட்டாயம் இல்லை. முதல் சீரும் ஈற்றுச் சீரும் மோனைப் பொருத்தத்துடன் வரும்.

38. திருவருட்பா, 6:76:2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/220&oldid=1571304" இலிருந்து மீள்விக்கப்பட்டது