உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

வகை-1 (இயற்சீர் வெண்டளையால் ஆனது)

205

"பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டு

தொண்டர். 93

இதில் இயற்சீர் வெண்டளை பொருந்தி முதல் நான்கும் ஈரசைச் சீர்களாயின. இறுதியில் விளங்காய்ச்சீர் அமைந்து முதற்சீருக் கேற்ற மோனை பெற்றது. முதற்சீர் நேரசையால் தொடங்கு தலின் அடிதோறும் பதினாறு எழுத்துகள் வந்துள்ளன. சகலகலா வல்லியே என ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிகிறது.

இதுபோல் பலவகைகளில் அமையும் கட்டளைக் துறையின் சீர் அளவுகளைக் கண்டு பிரித்து அமைக்கலாம்.

கலித்

லிவெண்பா : உலா, தூது போன்ற சில சிற்றிலக்கியங்கள் கலிவெண்பாவில் இயற்றப்படுதல் மரபு. அச் சிற்றிலக்கியங்களைச் சுவடிகளிலிருந்து பெயர்த்து எழுத, கலிவெண்பாவின் சீர் வரையறை களில் பயிற்சி பெறுதல் வேண்டும்.

வெள்தளைதட்டு, வெள்ளோசை பெற்று, ஈற்றடி முச்சீரால் முடிவது வெண்பா எனப்படுகிறது. எனப்படுகிறது. அதே இலக்கணமுடையதாய் அடிவரையறையின்றி நடப்பது கலிவெண்பாவாகிறது.

இரண்டடி

ஓரெதுகையாய் வருவது அடிகளைப் பிரித்து எழுதத் துணைசெய் கிறது. இரண்டாமடியின் ஈற்றுச்சீர் அவ்வடியின் முதற்சீருக்கேற்ற எதுகை பெற்ற தனிச் சொல்லாய் வருவது நேரிசைக் கலிவெண்பா எனப்படுகிறது.

இம்மைப் பிறப்பில் இருவா தனையகற்றி

மும்மைப் பெருமலங்கண் மோசித்துத் -தம்மைவிடுத்து

கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி யாட்கொண்டு அடியேற்கு முன்னின் றருள்'”*°

இது நேரிசைக் கலிவெண்பா. தனிச்சொல் இன்றி அடி நிரம்பி நடப்பது இன்னிசைக் கலிவெண்பாவாகும்.

சீர் அளவு ஒத்து வரும்

விருத்தப்பாவின் தன்மை கலிவெண்பாவிற்கு இல்லை.

ஆனால்

இயற்சீர் வெண்தளை வெண்சீர் வெண்தளைகள் பொருந்த வருமாற்றினை அறிந்து பிரித்து எழுதுவது முறையாகும்.

39. சகலகலாவல்லி மாலை,7.

40. கந்தர் கலிவெண்பா, இறுதியடிகள்.

அடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/221&oldid=1571305" இலிருந்து மீள்விக்கப்பட்டது