உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

சுவடி இயல்

தாறும் பொழிப்பு மோனை அமைவதும் துணைபுரியும்.

சீர்பிரித்து எழுதத்

வெண்கலிப்பா : கலிவெண்பாவினைப் போன்று அமைந்து, கலித்தளை தட்டு வருமேயாயின் அது வெண்கலிப்பா என்று பெயர் பெறுகிறது.

இவ்வாறான பா இனங்களின் வகைகளைத் தவிர நால்வகைப் பாக்களையும் இலக்கணமுறைப்படிப் பிரித்தமைக்க அறிதல் வேண்டும். வழக்காறு மிகுதியின்மையாலும், இலக்கண மரபுகள் தெளிவாகக் கூறுவதாலும் அவை இங்கு விடப்படுகின்றன.

"இலக்கிய ஆசிரியர் கையாளும் செய்யுளமைப்பு முறையை யும் நன்கு தெரிதல், சுத்தப் பதிப்பிற்கு இன்றியமையாதது. பாடத் தெளிவில்லாத இடமொன்றில் மட்டும், செய்யுள மைப்புக் கெட்டிருக்குமாயின், இருக்கும் பாடம் தவறானது என்பது கூறாமலே விளங்கும்’*2

என்னும் வி.அய். சுப்பிரமணியம் அவர்களின் கருத்து, பாட்டு அமைப்பை அறிதலின் இன்றியமையாமையை உணர்த்துகிறது.

ஒரு

ஒப்பிடும் பணி

கையெழுத்துத் தெளிவின்மை, சுவடி எழுத்துமுறை, பாட்டு நடை, பாட வேறுபாடு, மூலபாட ஆய்வு ஆகிய பயிற்சிகளின் வழி சுவடியிலிருந்து தூய படியினை உருவாக்கிய பிறகு அதே நூலுக்குரிய பிற சுவடிகளோடு ஒப்பிடுதல் வேண்டும். அப்போது கிடைக்கும் பாடங்களைத் தனியே குறித்து வைத்து இறுதியில் பொருள் பொருத்தமுடைய பாடத்தைப் பதிப்புக்கு எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். பிறவற்றை அடிக்குறிப்பில் சுட்ட வேண்டும். இடைச் செருகல்கள் காணப்படின் அவற்றின் உண்மை யறிதல் தேவை. அவ் இடைச்செருகல் அவ் இடைச்செருகல் இடம், பொருள், நடை,

முன்பின் பாடலோடு தொடர்பு ஆகிய பொருத்தங்களால்

மூல நூலாசிரியரின் செய்திகளாக

இருந்து நாம் படியெடுத்த சுவடியில் விடுபட்டிருக்கக் கூடுமா என்பதை முதலில் அறிதல் வேண்டும். புறச் சான்றுகளின் வழியும் அப்பொருத்தத்தை ஆய்வு செய்தல் வேண்டும். பொருத்தமுடையதாயின் நூலினிடை

41. சில கட்டுரைகள். தொகுதி-1. பக். 130.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/222&oldid=1571306" இலிருந்து மீள்விக்கப்பட்டது