உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

207

யில் சேர்த்தும், அற்றதாயின் அடிக்குறிப்பில் கொடுத்தும் பதிப்பித்தல் வேண்டும். இதைப்போலவே பாடல் அடி மாற் றங்கள், பாடல் இடமாற்றங்கள், ஓரங்களில் காணப்படும்

பலவகைக் குறிப்புகள் ஆகியவற்றையும் உறுதி செய்தல் வேண்டும். சுவடி அண்மை நூலகங்களிலிருந்தால் நேரில் சென்று ஒப்பிட்டுக் கொள்ளலாம். சேய்மை நூலகமாயின் படிஎடுக்கச் செய்து பெற்றுக் கொள்ள வழியுண்டு. அச்சாகியிருப்பின் பழைய அச்சு நூல்களையும் பெற்று ஒப்பிடலாம். இன்று கிடைக்காத சுவடி களைக் கொண்டு அச்சிடப்பட்டவை ஆயின் அந்த அச்சு நூல்களும் சுவடிகளுக்குச் சமமாகும்.

ஒப்பிடுதலின் பயன் : எழுதுவதற்குத் துணையாயிருந்த மூலச் சுவடியில் பிழை, விடுபட்டது, விளங்காதது, எழுத்துத் தெளி வின்மை,ஓலை முறிவு போன்றவற்றால் ஐயம் ஏற்பட்ட இடங்கள் வேறு சுவடிகளால் திருத்தம் பெறும். பாட வேறுபாடுகள் பல கிடைக்கும். அவற்றுள் சிறந்த பாடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். பிற நூல் சுவடிகளின் பயன் கூறிய செய்திகள் யாவும் ஒப்பிடுதல் பணியின் பயனாகவே அமைவனவாகும்.

"கலிங்கத்துப் பரணி ஏட்டுப் பிரதியொன்றைக் கொண்டு அப்பரணி யச்சுப் பிரதிகளைச் சோதிக்க நேர்ந்தபோது பொருணயமுள்ள சுத்த பாடங்கள் பல கிடைத்தமையாற் பெருமகிழ்ச்சி விளைத்தது

என்பர் மு. இராகவையங்கார். 2

விஷயம் முரண்பட,

"ஒத்திட்டுப் பார்த்ததில் சில அம்முரண்பட்ட விஷயங்களுக்கெல்லாம்... சபாபதிப் பிள்ளை யவர்களைக் கொண்டே.. திருத்தியும் புதுக்கியும்...அச்சிட்டு

வெளிப்படுத்தினேன்”

என்பர் இ. ஒன்னைய கவுடர்.

இவற்றால் அச்சான நூலையும் சுவடியோடு ஒப்பிட்டுத் திருத்தம் செய்து சிறந்த பாடங்களோடு மீண்டும் அச்சிடப்பட்டது

என்பதும், ஒப்பிடுவதால் பல திருத்தங்கள் அமைந்தன என்பதும் வெளியாகின்றன.

42. கலிங்கத்துப்பரணி யாராய்ச்சி, முன்னுரை, பக்-1. 43. தேவாங்க புராணம். முன்னுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/223&oldid=1571307" இலிருந்து மீள்விக்கப்பட்டது